கொன்றைவேந்தன் – மூலம்

தமிழில் எழுந்த பிற்கால (சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) நீதிநூல்கள், சமுதாயத்தின் தகவமைப்பில் பேரிடம் வகித்துள்ளன. கடந்த நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்ப் பாடத்தில் இவை கற்பிக்கப்பட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அடிப்படைப் பாடமாக இருந்தவை இந்த நூல்களே. எளிய ஒற்றை வரிகளில் வாழ்க்கைக்கு அடிப்படையான நீதிபோதனையைச் சொல்லிச் செல்வது இந்த நூல்களின் குணம். பிற்காலப் பெண்பாற் புலவரான (சங்க கால ஔவை வேறு) ஔவையார் இயற்றிய ‘கொன்றைவேந்தன்’ அவற்றில் குறிப்பிடத் தக்கது. 91 வரிகளால் ஆன சிறு நூல் இது.