எனது முற்றத்தில்- 22

என் மதிப்புக்குரிய நண்பர் பி.எஸ்.என்.மல்லையா பற்றிப் பார்ப்போம். வங்கி அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் மல்லையா. சங்கப் பெரியவர்கள் சொல்லியதன் பேரில் 1948-இல் தொடங்கிய ‘விக்ரமா’ வார இதழின் ஆசிரியராக 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டார். இவரை காங்கிரஸ் கட்சி வளைத்துப் போட்டுக்கொள்ள குறி பார்த்தது.  இவருடைய  பணிக்காலம் நெடுக கர்நாடகாவின் நாலைந்து காங்கிரஸ் முதலமைச்சர்கள் உள்பட அனைவருடனும் நெருங்கிப் பழகியவர். ஆனால் காங்கிரசின் அழைப்புக்கு ஒரு ‘நமஸ்தே’ போட்டுவிட்டு தொடர்ந்து ஹிந்துத்துவ இதழியலில் காலுறைத்து நின்றார். ..

எனது முற்றத்தில்- 21

சுயநலமே இல்லாமல் மற்றவர்களின் துயர் துடைக்கும் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டால் சித்த சுத்தி வாய்க்கும் என்பார் காஞ்சி மஹாசுவாமிகள். சித்த சுத்தியால் தெய்வ தரிசனம் கைகூடும் என்றும் மகான்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.  அனைவருக்குமான ஆன்மிக ராஜபாட்டை இதுதான். அதில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள்  அவரவர் கர்மவினைப் பலனுக்கு ஏற்ப உயரங்களை அடைகிறார்கள் என்பது அனுபவபூர்வமான ஹிந்துத்துவ ஞானம்....

எனது முற்றத்தில்- 20

அந்த வழியே நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்த ’துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசாமி தாமாக அந்த வகுப்பில் பிரவேசித்தார். வகுப்பில் இருந்த 200 பேர் முகத்திலும் ஒரு மலர்ச்சி.   "மம நாம ஸ்ரீராம், பவதஹ நாம கிம்?" என்று சோவை நோக்கியும் ஸ்ரீராமன் தன் அஸ்திரத்தை ஏவினார். லாகவமாக அதைக் கையாண்ட சோ, "மம நாம ஏகாக்ஷரம்!" (என் பெயர் ஓர் எழுத்து) என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.....

எனது முற்றத்தில்- 19

ஸ்ரீ குருஜி கோல்வல்கர் நூற்றாண்டு 2006இல் வந்தது. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், கட்டுரைகள், பேட்டிகளின் பதிவுகள் 'ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் 12 தொகுதிகளாக  வெளியாகின. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நிறைய பெரியோர்கள் வந்து இதற்காகவே சென்னையில்  தங்கி பதிப்புப் பணியை நிறைவேற்றிக் கொடுத்தார்கள் என்பதால் என் மனதில் மலைப்பே தோன்றவில்லை. தொகுதிகளின் பல்வேறு கட்டுரைகளின் நடையை செப்பம் செய்து கொடுத்த இருவர் தற்போது இரண்டு மாநிலங்களின் ஆளுநர்கள்  என்பது சுவாரஸ்யமான தகவல். ....

எனது  முற்றத்தில்- 18

அரசியல்/ விளையாட்டு/ சினிமா பிரபலங்களுக்கு ராணுவ கௌரவம் அளிப்பது ஒரு நோக்கத்துடன் தான்.  டெண்டுல்கர், மோகன்லால், சச்சின் பைலட் போன்றவர்கள் பாரத இளைஞர்கள்  மனதில் பதிந்த நட்சத்திரங்கள். எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் ராணுவ கௌரவம் இளைஞர்கள் மத்தியில் ராணுவம் பற்றிய மதிப்பை உயர்த்தும்.....

எனது முற்றத்தில்- 17

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மாதம் ஒரு சுபாஷிதம் வீதம் சொல்ல ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் ஸ்வயம்சேவகர்கள் எத்தனையோ ஆண்டுகளாகப் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.  எனவே சமுதாய ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்த வேண்டுமானா,ல் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் "அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி,  நாஸ்தி மூலம் அனௌஷதம்; அயோக்ய புருஷஹ நாஸ்தி, யோஜகஸ் தத்ர துர்லபஹ" (மந்திரத்துக்கு ஆகாத அட்சரம் இல்லை,  மருந்துக்கு ஆகாத மூலிகை இல்லை, தகுதி இல்லாதவன் என்று யாரும் கிடையாது; ஒருங்கிணைப்பு  செய்வோர்  கிடைப்பதே அரிது) என்ற சுபாஷிதம் சொல்வது சகஜம். ....

எனது முற்றத்தில்- 16

நெல்லை மாவட்டக் கடற்கரையோரம், இடிந்தகரை கிராமத்தில் 1969இல் ஏராளமான மீனவ கிறிஸ்தவர்கள் தாய்மதம் திரும்பினார்கள்.  பிரமாண்டமான சர்ச்சுக்கு எதிரே சின்னஞ்சிறு விநாயகர் கோயில் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்தக் கோயிலுக்கு நேரில் சென்ற ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மீனவ சகோதர சகோதரிகள் மத்தியில் அருளுரை நிகழ்த்தினார். மீனவர்களை அந்த வட்டாரத்தில் பரதவர்கள் என்று குறிப்பிடுவார்கள். இதை சுட்டிக்காட்டிய சுவாமிகள் "நீங்களெல்லாம் பரதனின் வம்சத்தில் வந்தவர்கள். இது உங்களுக்கு பெருமை தரும் விஷயம்" என்று எடுத்துக் கூறினார். இதைக் கேட்டு அந்த மீனவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் அதைக் கண்ட இந்தத் துறவிக்கும் கண் கலங்கியது....

எனது முற்றத்தில்- 15

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள 'வடகிழக்கு பல்கலைக்கழக' ஆராய்ச்சியாளர்கள் பசுவின் சாணத்தை  1,700 டிகிரி செல்ஷியஸ் சூட்டில் எரித்து அதை வடிகட்டியாக்கி கடல்நீரை வடிகட்டினால் பாக்டீரியா இல்லாத நன்னீர் கிடைக்கிறது என்று கண்டுபிடித்திருப்பதாகத் தகவல். பாரத விஞ்ஞானிகளும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது உலகம் நாளை சந்திக்க இருக்கிற கடுமையான குடிநீர்ப் பிரச்னைக்கு கோமாதா புண்ணியத்தால் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ...

எனது முற்றத்தில் – 14

குருக்ஷேத்திர  பகவத் கீதை முற்றோதல்  நடத்திய ஆந்திர அன்பரைப் பற்றி சொல்லத் தொடங்கி அவர் குடும்பம் பற்றி விவரித்து … தமிழில் எழுதிக்கொண்டே போகும்போது, பாரத கலாச்சார வியாபகம் எவ்வளவு அபார சக்தி கொண்டது என்பது உறைத்தது. மாநில வேலிகள் எல்லாம் எங்கோ கரைந்து மறைய… (இந்த சம்பவச் சங்கிலியில்   அமெரிக்காவும் ஒரு களம் என்பதால்) உலகு தழுவிய பாரதீய கலாச்சாரம் என்னைப் பார்த்துப் புன்னகைத்தது. ....

எனது முற்றத்தில் – 13

ஒரே தெருக்காரர்களான 5, 6 குடும்பத்தினர் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சித்திரான்னம் எனப்படும் விதவித கலவை சாதம் கட்டிக்கொண்டு காவிரியை அல்லது தாமிரபரணியை அல்லது பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நதியை நோக்கி நடையைக் கட்டுவார்கள். அல்லது வண்டி கட்டுவார்கள்.  ஆற்றங்கரை மணல் பரப்பில் அன்று ஒரு வேளை சாப்பாடு அத்தனைபேருக்கும் பொது. ஆனால் அவரவர் வீட்டில் சமையல் செய்து எடுத்து வந்து பகிர்வார்கள். எந்த வீட்டில் இருந்து என்ன கலவை சாதம் என்று முன்கூட்டியே  பேசியிருப்பார்கள்.  காலங்காலமாக நதியைப் பெண்ணாகப் போற்றும் நமது தொன்மை நாகரீகம் காரணமாக அன்றைய தினம் ஆற்றை வழிபடுவார்கள்.  அடுத்து  கட்டுச்சோற்றை ஒரு கட்டுக் கட்டுவார்கள். எல்லாவற்றுக்கும் இடையில் ’கம்புக்கும் காவல், தம்பிக்கும் பெண் பார்த்த’ படலங்களும் அரங்கேறும்.