மகாவித்துவான் சரித்திரம்- 2(6ஆ)

நல்ல திறமையுள்ள விகடகவியொருவர் அப்பொழுது பல வகைப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்களைப் பேசி யாவரையும் சிரிக்கும்படி செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கே வந்திருந்த வேதநாயகம் பிள்ளை இப்புலவர்கோமானை நோக்கி, "விகடகவிகள் வித்துவான்களுக்கு நேர் விரோதிகள்; வித்துவான்கள் இழிந்தவற்றையும் உயர்ந்தனவாகக் கூறுபவர்கள்; விகடகவிகள் உயர்ந்தவற்றை இழிந்தனவாக நினைக்கும்படி பேசுபவர்கள்" என்றார். புத்திமான்கள் பேசும் எந்தப் பேச்சும் நயமாக இருக்குமென்பதை அவருடைய வார்த்தை புலப்படுத்தியது.

மகாவித்துவான் சரித்திரம்- 2 (6அ)

கவிஞர்களுடைய பேராற்றல் இத்தகையதென்பதைச் சரித்திரங்களின் மூலமாக அறிந்தவனேயன்றி அன்று போல நான் நேரிற் பார்த்ததில்லை. ஆதலின் ஒரு மகாகவியின் வாக்கிலிருந்து ஆற்றொழுக்கைப் போலக் கவிதாப்பிரவாகம் பெருகிக்கொண்டிருப்ப அதனைக் காதினாற்கேட்டும் கையினாலெழுதியும் மனத்தினாலறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதற்கரியது....

மகாவித்துவான் சரித்திரம்- 2(5)

அப்பொழுது தேசிகர் புன்னகை கொண்டு, "என்ன பிள்ளையவர்கள்! இராத்திரி வெகு வேடிக்கைகள் பண்ணிவிட்டீர்களே; மிகவும் சிரமமாக இருந்திருக்குமென்றும் தூக்கம் கெட்டிருக்குமென்றும் எண்ணுகிறோம்" என்று பாராட்டிக் கூறி அழைத்து நெற்றியில் திருநீறிட்டுப் பக்கத்திலிருக்கும்படி செய்தார். பின்பு அங்கேயிருந்த பிரபுக்களையும் வித்துவான்களையும் நோக்கி, "இவர்கள் இருப்பது ஆதீனத்திற்கு மிகவும் கெளரவமாகவே இருக்கின்றது. என்ன பாக்கியமிருந்தாலும் இதற்கு ஈடாகாது. குறைந்த கல்வியுடையோரையும் கெளரவிக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிற இவர்கள் குணம் யாருக்கு வரும்! ஆதீனத்தின் அதிர்ஷ்டமென்றே சொல்ல வேண்டும்" என்று முதல்நாள் நிகழ்ந்தவற்றைச் சொல்லி எல்லோரையும் மகிழ்வித்தனர்.....

மகாவித்துவான் சரித்திரம் – 2(4இ)

அப்பால் ஸரஸ்வதி பூஜையன்று பட்டீச்சுரத்துக்கு அருகிலுள்ள என் ஊராகிய உத்தமதானபுரம் சென்றேன். பூஜையை அங்கே முடித்துக்கொண்டு மறுநாளாகிய விஜயதசமியன்று புனப்பூஜையைச் செய்துவிட்டுப் பிற்பகலில் புறப்பட்டுப் பட்டீச்சுரம் வந்து 4 மணிக்குப் பிள்ளையவர்களைக் கண்டேன். "ஏன் இவ்வளவு அவசரமாக வந்தீர்?" என்றார். "இன்று விஜயதசமியாதலால் ஐயா அவர்கள் கையால் ஏதாவது புஸ்தகம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளலா மென்றெண்ணி விரைந்து வந்தேன்” என்றேன்.

மகாவித்துவான் சரித்திரம்- 2(4ஆ)

ஒவ்வொரு தினத்தும் இரவில் பிள்ளையவர்கள் போய் உண்பதற்கு அமர்ந்தவுடன் நான் புத்தகமுங் கையுமாகச் சென்று பிள்ளையவர்கள் பக்கத்திலிருந்து படிக்க வேண்டியவற்றைப் படித்துப் பொருள் கேட்க வேண்டுமென்பது ஆறுமுகத்தா பிள்ளையின் கருத்து. எந்தக் காலத்தும் இவர் தடையின்றிப் பாடஞ் சொல்லுவார். என்றைக்கேனும் தூக்கத்தால் அங்ஙனம் செய்வதற்குத் தவறிவிட்டால் அன்று ஆகாரம் செய்துகொண்ட பிறகாவது மறுநாட் காலையிலாவது ஆறுமுகத்தா பிள்ளை என்னைக் கோபித்துக் கொள்வார்....

மகாவித்துவான் சரித்திரம் -2 (4அ)

செட்டியார் எழுந்து என்னைப் பார்த்து, "நீர் நன்றாகப் படிக்க வேண்டியவற்றைப் படித்துக் கொள்ளும். கூட இருப்பதையே பெரும்பயனாக நினைந்து சிலரைப்போல் வீணே காலங்கழித்துவிடக் கூடாது; சிலகாலம் இருந்துவிட்டுத் தெரிந்துவிட்டதாக பாவித்துக்கொண்டு சொல்லாமல் ஓடிப்போய்விடவும் கூடாது. இப்படிப் பாடம் சொல்லுபவர்கள் இக்காலத்தில் யாரும் இல்லை. உம்முடைய நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன்" என்று சொல்லி இவரிடம் விடைபெற்றுத் தம் வீடு சென்றார். செட்டியாருடைய வார்த்தைகள் எனக்கு அமிர்த வர்ஷம் போலேயிருந்தமையால் அவற்றைக் கருத்திற் பதித்து அங்ஙனமே நடந்து வருவேனாயினேன்.

மகாவித்துவான் சரித்திரம்- 2(3)

இவர் திருநீறு பெறுவதற்கு எழுந்து செல்லும்பொழுது தேசிகரைப் பார்ப்பதற்கு மிக்க ஆவலோடு இவர் பின்னே நின்ற யானும் சென்றேன். நெற்றியில் திருநீறு இட்டு இவரை இருக்கச்செய்துவிட்டுத் தேசிகர், "உங்களுக்குப் பின்னே வருகிற இவரோ முன்பு வந்த பொழுது பாடங்கேட்பதாகச் சொல்லிய சாமிநாதைய ரென்பவர்?" என்று விசாரித்தார். அப்பொழுது 'ஸ்வாமி' என்று இவர் சொல்லவே எனக்கு உண்டான உவப்பிற்கு எல்லையே இல்லை. ஒரு பொருளாக என்னை நினைந்து தாம் வந்தபொழுது நான் பாடங்கேட்டு வருவதாக இப்புலவர்பிரான் சொல்லிய அருமையையும் அதனை ஞாபகப்படுத்திக் கொண்டு விசாரித்த தேசிகருடைய பெருமையையும் எண்ணி எண்ணி இன்பம் அடைந்து கொண்டே சென்று தேசிகர் இருக்கும்படி சொல்ல இவருக்குப் பின்னே இருந்தேன்.

மகாவித்துவான் சரித்திரம் -2(2)

என்னுடைய இயற்பெயர் வேங்கடராமனென்பது; அதுவே சர்மா நாமம். இவரிடம் என் தந்தையார் சொல்லியதும் வேங்கடராமனென்பதே. அப்பெயராலேயே என்னை அழைத்துவந்த இவர் சில தினங்களுக்குப்பின் ஒருநாள் என்னை நோக்கி, "வீட்டார் உம்மை அழைப்பது இந்தப் பெயராலேயா? அன்றி உமக்கு வேறு பெயருண்டோ?" என்று கேட்டார். நான், "வேங்கடராமனென்பது மூதாதையின் பெயராதலின் தாய் தந்தையர்கள் அவ்வாறு அழையாமல் சாமிநாதனென்பதன் திரிபாகிய 'சாமா' என்று அழைப்பார்கள்" என்றேன். "சாமிநாதனென்ற பெயரே நன்றாக யிருக்கிறது. இனி அப்பெயராலேயே உம்மை அழைக்கிறேன்!” என்று கூறி அன்றுமுதல் அப்பெயராலேயே அழைத்து வருவாராயினர். இவருடைய விருப்பத்தின்படி பிறரும் அங்ஙனமே செய்துவந்தார். அப்பெயரே நிலைத்துவிட்டது....

மகாவித்துவான் சரித்திரம் – 2(1)

இறைவன் திருவருள் கூட்டினமையால் என் தந்தையாரின் முயற்சியும் எனது விருப்பமும் பயன்பெறும் காலம் வந்து வாய்த்தது. பிரஜோற்பத்தி வருஷம் சித்திரை மாதமுதலில் (1871 ஏப்ரலில்) என்னை உடனழைத்துக்கொண்டு தந்தையார் மாயூரம் சென்று நல்ல நாளொன்றன் பிற்பகலில் பிள்ளையவர்களுடைய வீட்டிற்குப் போனார். அப்பொழுது அவ்வீட்டின் முதற் கட்டில் குற்றாலம் (திருத்துருத்தி) தியாகராச முதலியாரென்பவரும் சிவசின்னந் தரித்த வேறொருவரும் இருந்தார்கள்....

மகாவித்துவான் சரித்திரம்- பாகம் 2 (முகவுரை)

தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையரை உருவாக்கியவர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். அவரது வீட்டில் குருகுலவாசம் இருந்து தமிழ் கற்ற உ.வே.சா. பிற்காலத்தில், தமிழுக்கு அணியாகத் திகழும் பல இலக்கியங்களை கால வெள்ளத்தில் மறையாமல் பதிப்பித்துக் காத்தார். உ.வே.சா. தனது குருநாதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் தகுந்த ஆதாரங்களுடனும் எழுதிய நூல் இது. “திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்” என்பதே ஐயர் அளித்த தலைப்பு. இங்கு நமது வசதிக்காக, ‘மகாவித்துவான் சரித்திரம்’ என்று குறிக்கப்படுகிறது. இந்நூலில் தனது குரு மீதான பக்தியை சீடர் வண்ணமுற வெளிப்படுத்துகிறார். வாழையடிவாழையென வந்துதித்த மரபால் நமது தாய்த் தமிழ் மொழி காக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு மிகச் சரியான சான்றான இந்நூல், நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முதல் பாகம் முடிந்து, இரண்டாம் பாகம் இன்று தொடங்குகிறது...

மகாவித்துவான் சரித்திரம்- 1(24-இ)

மாயூரம் சிறந்த சிவஸ்தலமாதலாலும் கல்விமான்களாகிய பல பிரபுக்களும் தமிழபிமானிகளும் வித்துவான்களும் நிறைந்திருந்த நகரமாதலாலும் இவருக்கு அவ்வூர் வாழ்க்கை ஏற்றதாகவும் உவப்புள்ளதாகவும் இருந்தது. அங்கே இருந்துகொண்டு அடிக்கடி திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சிலநாள் அங்கே இருந்துவிட்டு வருவார். இவருடைய வீடு ஒரு கலைமகள் நிலயமாகத் திகழ்ந்தது. பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்வதும், தம்மைப் பார்க்க வந்த பிரபுக்களிடம் தமிழ் நூல்களிலுள்ள அருமையான செய்திகளைக் கூறி மகிழ்வித்தலும், புதிய செய்யுட்களை இயற்றுதலும் ஆகிய தமிழ்த் தெய்வ வழிபாடுகளே காலை முதல் இரவு நெடுநேரம் வரையில் இவருடைய வேலையாக இருந்தன. (முதல் பாகம் முற்றிற்று)...

மகாவித்துவான்-சரித்திரம்-1(24ஆ)

காசியாத்திரை பலமுறை செய்தவரும் அக்காலத்தில் திருவிடைமருதூர்க் கட்டளை அதிகாரம் பெற்றுப் பார்த்து வந்தவருமான ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரானவர்களுடைய விருப்பத்தின்படி ஸ்ரீ காசியின் தலவரலாறுகளைக் கூறும் நூல்களுள் ஒன்றாகிய ஸ்ரீ காசி ரகசியமென்னும் நூல் இவரால் தமிழிற் செய்யுள் வடிவாக இயற்றப்பட்டது.

மகாவித்துவான் சரித்திரம்- 1(24அ)

அட்சய வருஷம் வைகாசி மாதத்திற்குமேல் (1866) பாண்டி நாட்டின்கண் உள்ளனவாகிய சூரைக்குடி (சூரைமாநகர்), கண்டதேவி என்னும் இரண்டு ஸ்தலங்களின் புராணங்கள் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழிற் செய்யுள் நடையாக இவராற் செய்யப்பட்டன. அவ்விரண்டு ஸ்தலங்களிலுமுள்ள செல்வர்களுக்கு இவருடைய பெருமையை எடுத்துக் கூறி இவரைக் கொண்டு புராணங்கள் செய்விக்கும்படி தூண்டியவர் கோயிலூர்ச் சிதம்பர ஐயாவும் இவருடைய மாணாக்கராகிய நாராயண செட்டியாரும் ஆவர். ....

மகாவித்துவான் சரித்திரம்- 1(23)

இவர் சில தினம் கும்பகோணத்திலேயே இருந்து வருகையில் ஒருநாள், அவ்வூரில் வராகக் குளத்தின் கரையிலுள்ள ரங்கசாமி ஐயங்காரென்னும் ஸ்ரீமானொருவர் இவருடைய கவித்துவத்தையறிந்து, "விஷ்ணு புராணத்தை வடமொழியிலிருந்து தமிழில் செய்யுள் நடையாக மொழிபெயர்த்து நீங்கள் செய்து தரவேண்டும். செய்து தந்தால் ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நாங்கள் தொகுத்துத் தருவோம். எங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் மிக்க விருப்பத்தோடிருக்கின்றனர்” என்றார். இவர், “நான் சைவனாதலின் அவ்வாறு செய்தல் கொண்ட கோலத்திற்கு மாறாகும். ஆதலால் அது செய்ய என்னால் இயலாது. சென்னையைச் சார்ந்த எழும்பூரில் திருவேங்கடாசல முதலியாரென்னும் வைணவ வித்துவானொருவர் இருக்கின்றார்; அவர் வைணவ நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர்; நூல் இயற்றுதலிலும் வன்மையுடையவர். அவரைக் கொண்டு உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்'' என்று சொல்லி விட்டார்.

மகாவித்துவான் சரித்திரம்- 1(22)

அப்பால் அம்பலவாண தேசிகருக்குப் பிள்ளையவர்களிடத்து மிக்க மதிப்பும் கருணையும் உண்டாயின. ''இவர் இருப்பது மடத்திற்குக் கெளரவமென்று சின்னப் பண்டாரம் சொன்னது சரியே. இவருக்கு என்னதான் செய்விக்கக் கூடாது!'' என்று எண்ணிக் காறுபாறு முதலிய மடத்து உத்தியோகஸ்தர்கள் பலரையும் அழைத்து, ''இவருக்கு எந்தச்சமயத்தில் எது வேண்டுமாயினும் குறிப்பறிந்து கொடுக்கவேண்டும்; யாதொரு குறையுமின்றி இவரைப் பாதுகாத்து வரவேண்டும்'' என்று கட்டளையிட்டார்.....