தமிழ்த்தாயைக் காத்த தனயன்

பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?

மகாவித்துவான் சரித்திரம் – 2(16)

ம்காவித்துவானின் மாணாக்கர் முதலியவர்கள் இயற்றிய சிறப்புப் பாயிரச் செய்யுட்கள் முதலியவற்றில் இவரைப் பாராட்டிய பகுதிகள், இந்த அனுபந்தத்தில், உ.வே.சா. அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளன....

மகாவித்துவான் சரித்திரம்- 2(15)

உ.வே.சா. அவர்களுக்குக்கிடைத்த, மகாவித்துவானுக்கு சிலர் எழுதிய கதங்கள் இவை...

மகாவித்துவான் சரித்திரம்- 2(14)

மகாவித்துவான் அவ்வப்போது எழுதிய தனிச் செய்யுட்கள், அன்பரைப் பாராட்டிய செய்யுள்கள், கடிதப் பாடல்கள், சிறப்புப் பாயிரப் பாடல்களில் கிடைத்தவற்றை அனுபந்தமாக பிற்சேர்க்கையில் இணைத்து வழங்கி இருக்கிறார் உ.வே.சா....

மகாவித்துவான் சரித்திரம்- 2(13)

பிள்ளையவர்களுடைய இளம்பிராயத்தில் ஒருவர் பாடங்கேட்க வந்தார். "என்ன படிக்க வேண்டும்?" என்று இவர் அவரைக் கேட்கவே அவர், "இலக்கியம் படிக்க வேண்டும்" என்று கூறினார். அப்பால், "இலக்கணம் படிக்க வேண்டாமா ?" என்று இவர் கேட்டபொழுது, “நன்றாகப் படித்திருக்கிறேன்" என்று அவர் விடை கூறினார்; உடனே இப்புலவர்பிரான் அவரை ஒரு செய்யுள் சொல்லச் செய்து, "இந்தப் பாடலில் எழுவாய், பயனிலை என்ன?" என்று கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்தும் விளங்காமல் விழித்துக் கொண்டே யிருக்கையில் இவர், "எழுவாய், பயனிலை" என்று சொன்னார்...

மகாவித்துவான் சரித்திரம் -2(12)

.... பிள்ளையவர்கள் தேவாரம், திருவாசகம், கல்லாடம், பெரிய புராணம், திருக்குறள், காஞ்சிப் புராணம், கம்ப ராமாயணம் என்பவற்றிலிருந்து மேற்கோள்களை எடுத்துச் சொல்லி மாணாக்கர் மனத்தில் கருத்துக்கள் தெளிவாகப் பதியும்படி செய்வார். பெட்டி நிறையப் பணத்தை நிரப்பிவைத்துக் கொண்டிருக்கும் வண்மையாளன் தடையின்றி எடுத்து வாரி வாரி வழங்குவது போலத் தமது உள்ளக் களஞ்சியத்தில் பல நாட்களாகச் சேமித்து வைத்த பொருள்களை யெல்லாம் பாடஞ்சொல்லுகையில் மாணாக்கர்களுக்கு வழங்கி வரும்பொழுது, "இவ்வளவு நூல்களையும் இவர் எப்படி மனத்திற் பதித்து வைத்துக்கெண்டாரோ!" என்னும் ஆச்சரியம் அயலிலிருப்பவர்களுக்கு உண்டாகும். நடக்கும் புஸ்தகசாலையென்று இவரைக் கூறலாம்....

மகாவித்துவான் சரித்திரம்- 2(11)

சிதம்பரம் பிள்ளைக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. அவர்களுள் முதல்வரும் மூன்றாம் புதல்வரும் அக்காலத்தில் இறந்துவிட்டனர். இரண்டாங் குமாரருக்கு வைத்தியநாதசாமி பிள்ளை யென்று பெயர். தம் தந்தையார் பார்த்து வந்த கப்பூர்க் கணக்கு வேலையை அவர் பார்த்துக்கொண்டு இப்பொழுது சௌக்கியமாக இருந்து வருகின்றனர். அவரை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. "உமக்கு ஆண் குழந்தை பிறந்தால் அக் குழந்தைக்குப் பிள்ளையவர்களுடைய பெயரை வைக்க வேண்டும்" என்று அவரிடம் நான் சொல்லியிருந்தேன்.

மகாவித்துவான் சரித்திரம்- 2(10ஆ)

இவருடைய அசெளக்கிய மிகுதியைத் தெரிந்து சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி பார்த்துவரும்படி தக்கவர்களை அனுப்பித் தெரிந்து கொண்டேயிருந்ததன்றி அடிக்கடி வந்து சொல்லும்படி எனக்கும் கட்டளையிட்டிருந்தார். அப்படியே அடிக்கடி சென்று இவருடைய நிலையைத் தெரிவித்துக்கொண்டு வரலாயினேன்.

மகாவித்துவான் சரித்திரம்- 2(10அ)

ஒருநாள் இவருக்கு லண்டனிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் 'மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இந்தியா' என்று மட்டும் விலாஸத்தில் எழுதப்பட்டிருந்தது. அது யாதொரு தடையுமின்றி இவருக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம் இவருடைய பெரும்புகழென்பதை அறிந்து மாணவர்களும் அன்பர்களும் மகிழ்ந்தார்கள். சுப்பிரமணிய தேசிகரும் இதனை யறிந்து பாராட்டினார்.

மகாவித்துவான் சரித்திரம் – 2(9)

புதுக்கோட்டை மன்னராகிய கெளரவம் பொருந்திய இராமசந்திர தொண்டைமானவர்களுடைய மூத்த தேவியாரான ஸ்ரீ பிரகதம்பா பாய் சாகேபவர்கள் அங்கே இவர் வந்திருத்தலைக் கேள்வியுற்றுத் தக்கவர்களை அனுப்பி இவரை அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து நாடோறும் பல அரிய விஷயங்களைக் கேட்டார்கள். தேவாரங்கள் சிலவற்றிற்கும் பெரிய புராணத்திலுள்ள பாடல்கள் சிலவற்றிற்கும் பொருள் கேட்டு அறிந்து தக்க ஸம்மானங்கள் பல செய்வித்து இவருடைய பூஜைக்கு வேண்டிய பாத்திரங்களை வெள்ளியினாலே செய்வித்து அளித்தார்கள்.

மகாவித்துவான் சரித்திரம் – 2(8)

ஒருநாள் நாங்கள் பாடங்கேட்டுக் கொண்டிருந்த பொழுது சென்னையிலிருந்த சுப்பராய செட்டியாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், "நான் திருச்சிராப்பள்ளியில் தங்களிடம் படித்துக் கொண்டிருக்கையில் வெஸ்லியன் மிஷன் ஸ்கூலில் எனக்கு வேலை கிடைத்தது. முதல் மாதச் சம்பளமாகிய ரூபாய் பதினைந்தைத் தங்களிடம் கொடுத்து வந்தனம் செய்து பெற்றுக்கொண்ட பொழுது தாங்கள் இந்தப் பதினைந்தைத் திரும்பவைத்தால் என்ன தொகையோ அதனைப்பெற்று வாழ்ந்திருக்க வேண்டுமென்று அருளிச்செய்தீர்கள். அந்தப்படியே தங்களுடைய பெருங்கருணையினால் எனக்கு இன்று ரூ. 50 சம்பளம் ஏற்பட்டது" என்று தெரிவித்திருந்தார். இவருடைய நல்வாக்குப் பலிதமாகுமென்பதைச் சிலராற் கேட்டிருந்த நாங்கள் அக்கடிதத்தால் அச்செய்தி உண்மையென்று அறிந்து மகிழ்ந்தோம்....

மகாவித்துவான் சரித்திரம் – 2(7ஆ)

தமிழ்ப் புலமையில் மன்னரான திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், எளியவர்பால் இரங்கும் தன்மையும், நகைச்சுவை உனர்வும் மிகுந்தவர் என்பதை அவரது சரித்திரத்தை எழுதிய அவரது முதன்மை மானவர் உ.வே.சா. வாயிலாக அறிகிறோம். இந்த அத்தியாயம், மகாவித்துவா அவர்களின் கருணைக்கு ஒரு சிறு சான்று...

மகாவித்துவான் சரித்திரம் – 2 (7அ)

ஒரு சமயத்தில் ஆறுமுகத்தாபிள்ளை, தம்முடைய குடும்ப சம்பந்தமாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரமொன்று எழுதிக் கொடுக்கும்படி நேர்ந்தது. அதிற் கையெழுத்துப்போடத் தொடங்குகையில் அவர், "ஆறுமுகம் பிள்ளை யென்று போடவா? ஆறுமுகத்தா பிள்ளை யென்று போடவா?" என்று கேட்டனர். இவர், "ஆறுமுகம் பிள்ளை யென்றால்  அத்துக் கெட்டுவிடுமே; ஆறுமுகத்தா பிள்ளை யென்றே போடலாம்" என்றனர். கேட்டவர்கள் மகிழ்ந்தார்கள்.

மகாவித்துவான் சரித்திரம் – 2 (6ஈ)

தாம் சொன்ன பொருளைச் செட்டியார் சிறிதும் பாராட்டவில்லையேயென்ற வருத்தம் மேற்சொன்ன மாணவருக்கு இருந்தது. எழுந்து செல்லுகையில் அம்மாணவரை நோக்கி இவர், "செட்டியார் மதிக்கவில்லையென்ற வருத்தம் உமக்கு இருப்பதாகத் தெரிகிறது. உண்மைப் பொருளுக்கு எப்பொழுதும் மதிப்புண்டு. அவர் மதியாவிட்டால் அதற்கு இழிவொன்றுமில்லை. பிறருடைய மதிப்பையும் அவமதிப்பையும் கவனிக்கக் கூடாது'' என்று ஆறுதல் கூறினார்.

மகாவித்துவான் சரித்திரம்- 2(6இ)

"உலகெலாம்" என்ற செய்யுளுக்கு அந்த உரையாசிரியர் எங்ஙனம் பொருள் செய்திருக்கிறாரென்பதை அறிவதற்கு அதனுரையைப் படிப்பித்து இவர் கேட்டார். அச்செய்யுளின் நயத்தை அவ்வுரை நன்கு புலப்படுத்தவில்லை. 'மலர் சிலம்படி' என்பதற்கு இலக்கணப் பிழையாக மலர் போன்ற சிலம்படியென்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அதனை யறிந்து இவர் மனவருத்தமடைந்து, "மலர் சிலம்படி யென்றது வினைத்தொகை; அதற்கு மலர்ந்த சிலம்படி யென்பதுதான் பொருள். மலர்போன்ற சிலம்படியென்று பொருள் கொள்ள வேண்டுமானால், மலர்ச்சிலம்படி யென் றிருத்தல் வேண்டும். அப்படியிருத்தல் இங்கே பொருந்தாது" என்றார்; உலகெலாம் மலர் சிலம்படியென இயைக்க வேண்டுமென்றும் இப்பொருளுக்கு மேற்கோள் திருவாசகத்திலுள்ள, "தில்லை மூதூ ராடிய சேவடி, பல்லுயி ரெல்லாம் பயின்றன னாக" என்பதென்றும் எங்களுக்குச் சொன்னார்.