கவிச்சுவை நிரம்பிய தமிழ் நூல்களுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். இது புறத்திரட்டு ஆசிரியர் உபகரித்த தமிழ்ச் செல்வம். நூல் முழுவதும் கிடைக்கவில்லை. அழகுடைய செய்யுட்கள் எனப் புறத்திரட்டின் ஆசிரியர் கருதிய 109 செய்யுட்களே இப்போது நமக்கு அகப்படுவன. பழைய இலக்கண உரைகளில் ஒரு சில செய்யுட்கள் முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்தன என்று கருத இடமுண்டு....
Tag: இலக்கிய தீபம்
இலக்கிய தீபம் – 15
ஒரு சிலர்க்குத் தமிழ்க் கவியென்பது இலக்கண விதிகளைக் கோத்து வைப்பதற்குரிய மாட்டு-கருவியாகவே தோன்றிக் கொண்டிருக்கும். வேறு சிலர்க்கு அது வாதப் பிரதிவாதங்கள் நிகழ்த்துவதற்குரிய தர்க்கப் பொருளாகவே தோன்றிக் கொண்டிருக்கும். இன்னும் ஒரு சாரார்க்கு அது காலவாராய்ச்சிக்கு உதவும் சரிதப் பொருளாகவே தோன்றும். கடைசியாக ஒரு சிலர்க்கு நலிந்து சிதைத்துத் தாம் கருதிய நுணுக்கப் பொருள்களை யிட்டு வைப்பதற்குரிய சொற்பையாகவே தோன்றி விடுகிறது. சிறந்த கவித்துவ நலம் படைத்தவன் தனது இதயத்தினின்றும் உணர்ச்சி ததும்பத் தோன்றிய கவிதையின் இன்பத்தைப் பிறர் அனுபவிக்க வேண்டுமென்றே கருதுவான். உண்மைக் கவிதையின் பயன் இன்பவுணர்ச்சியே யன்றிப் பிறிதல்ல. ....
இலக்கிய தீபம்- 14
சங்க இலக்கியங்களில் இத்தொண்டியைப் பற்றி வருவனவற்றை நோக்குவோம். மேல் கடற்கரையில் வெகுதொலைவில் இந்நகரம் இருந்தது என்பதை ஒரு புலவர் தற்காலத்தாருக்கு ஒவ்வாத ஒரு முறையிலே கூறுகிறார். ஒரு காதலன் தன் காதலி அருமையானவள் என்பதையும், அடைதற்கு முடியாதபடி அத்தனை தூரத்தில் (உயர்வில்) அவள் உள்ளவள் என்பதையும், ஓர் உவமானத்தால் குறித்தார். ‘கொரமண்டல் கோஸ்ட்’ (சோழ மண்டலக் கரை) என்னும் கீழ் கடற்கரையிலேயுள்ள சிறகு அற்ற நாரை 'மலபார் கோஸ்ட்' என்னும் மேல் கடற்கரையிலேயுள்ள தொண்டிப் பட்டினத்தின் கடற்கழியிலேயுள்ள அயிரை மீனை உண்ணுவதற்கு விரும்புவது போலுள்ளது தனது நெஞ்சு காதலியைக் காதலித்தது என்பது உவமானம்....
இலக்கிய தீபம் – 13
புகார் நகரின் வைப்பிடம் நம்மால் அறியமுடியவில்லை யென்றாலும், அங்கே நிகழ்ந்த வாழ்க்கை நெறி முதலியவை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்குச் சிறந்த ஒரு சான்று அகப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் நாம் அதிருஷ்டசாலிகள் என்றே கூறவேண்டும். பட்டினப்பாலை என்ற சங்கப்பாட்டு முன்னரே குறிப்பிடப்பட்டது. இது பத்துப் பாட்டினுள் ஒன்பதாவதாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. 301 அடிகளையுடையது. பொருள் ஈட்டுதற் பொருட்டு வேற்று நாட்டிற்குச் செல்லத் தொடங்கிய தலைவன் தனது நெஞ்சை நோக்கி, தலைவியைப் பிரிந்து, 'முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரேன்' எனச் செலவழுங்கிக் கூறுவதாக, சோழன் கரிகாற் பெருவளத்தானை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. பிரிவைப் பற்றிக் குறிக்கும் 5 அடிகள் ஒழிய ஏனை 296 அடிகளும் காவிரியின் பெருமையையும், காவிரிப்பூம் பட்டினத்தின் வாழ்க்கைச் சிறப்பையும், காவிரிப்பூம் பட்டினத்தின் வாழ்க்கைச் சிறப்பையும் கரிகாலனது வெற்றித் திறத்தையும் விரித்துக் கூறுகின்றன....
இலக்கிய தீபம் – 12
தமிழர் சரிதத்தின் ஆராய்ச்சி வரலாற்றில் எனது நண்பர் இராவ்ஸாஹெப் மு. இராகவையங்காரவர்களது 'சேரன் செங்குட்டுவன்' தலைமையான ஓர் இடம் பெற்றிருக்கிறது. இந்நூலால் ஆராய்ச்சியுலகில் ஒரு கிளர்ச்சி எழலாயிற்று. சேரரது பண்டைத் தலைநகர் யாது? அவர்களது தாயக்கிரமம் யாது? அவர்கள் ஒரே குடும்பத்தினரா? பல பிரிவினரா? அவர்களது வெற்றி வரலாறு யாது? கடைச்சங்க காலம் யாது? சிலப்பதிகார காலம் யாது? என்பன முதலியன அறிஞர்கள் தெளிதற்குரிய விஷயங்களா யமைந்தன. இந்நூல் 1915-ல் வெளிவந்தது. எனவே, இப்போது முப்பத்தைந்து ஆண்டுகட்கு மேல் ஆகிவிட்டன. பல அறிஞர்களும் மேற்கூறியவற்றுள் ஒவ்வொன்றனை யெடுத்து ஆராய்ந்துள்ளனர். ஆனால், ஒரு சில தவிர ஏனைய இன்னும் புதிர்களாகவே உள்ளன. இப்புதிர்களுள் ஒன்று 'மௌரியர் தென் இந்தியப் படையெடுப்பு'. மீண்டும் இதனைக் குறித்து ஆராய வேண்டும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.....
இலக்கிய தீபம் – 11
அதியமான் நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் ஔவையாருக்குச் சாதல் நீங்கும்படியாக நெல்லிக்கனி கொடுத்துப் புகழ் பெற்றவன். சேரமானுடைய உறவினன் என்றும், மழவர் என்னும் வீரர் வகையினருக்குத் தலைவன் என்றும் சங்க நூல்களில் குறிக்கப்படுகின்றான். இவனைப் 'போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி' எனப் புற நானூறு (91) கூறும். ஆகவே, இவன் பண்டைக்காலத்து வாழ்ந்த சிறந்த போர் வீரர்களுள் ஒருவன் என்பது நன்றாகப் புலப்படும். இவனுடைய வீரச்செயல்கள் புறநானூற்றில் (87-95; 97-101; 103-104; 206, 208, 231-232, 235, 310, 315, 390) விரித்து உணர்த்தப்படுகின்றன. ....
இலக்கிய தீபம் – 10
கடவுள் வாழ்த்தெனப் பொதுப்படக் கூறுதலால், உரைகாரர்களால் எடுத்தாளப்படும் பெருந்தகுதி வாய்ந்ததும் பண்டைகாலத்துச் சான்றோர்கள் இயற்றியதுமான ஒரு நூலினைச் சார்ந்ததே இச்செய்யுள் என்பது பெறப்படும். இவ்வியல்புகள் வாய்ந்தவற்றிற் சிறந்தன எட்டுத்தொகை நூல்களும் கீழ்க்கணக்கு நூல்களுமாமென்பது தெளிவு. நச்சினார்க்கினியரும் இந்நூல்களையே கருத்திற் கொண்டுள்ளா ரென்பது 'இது கடவுள்வாழ்த்து' என்பதனைத் தொடர்ந்து 'தொகைகளினுங் கீழ்க் கணக்கினும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக என்று எழுதிச் செல்லுதலான் அறியப்படும். தொகை நூல்களுள் ஒரு நூலின்கணிருந்து கடவுள் வாழ்த்துச் செய்யுளை எடுத்துக்காட்டி, அவற்றுள் அடங்கிய பிற நூல்களைக் குறித்து மேலை வாக்கியம் எழுந்ததெனக் கொள்ளுதல் பொருத்த முடைத்தாம்....
இலக்கிய தீபம் – 9
பல சுவடிகளை ஒப்புநோக்கித் திருத்தமான பாடங்களைக் கண்டு, நூதனமாக ஓர் உரையெழுதி 1937-ல் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வெளியிட்டார்கள். இப்பதிப்பே இதுவரை வெளிவந்துள்ள குறுந்தொகைப் பதிப்புக்கள் அனைத்திலும் சிறந்ததாகும். இதுவே இப்போது பலராலும் கற்கப்பட்டு வருவது. ஸ்ரீ ஐயரவர்கள் வெளியிட்ட இப்பதிப்பிலும் திருந்த வேண்டிய பகுதிகள் சில உள்ளன. அவற்றுள் ஒன்றைக் குறித்து இங்கே கூற விரும்புகிறேன்....
இலக்கிய தீபம்- 8
நமது தேச சரித்திரத்திற் பெரும்புகழ் பெற்றிருந்த இப்பாடலி நகரின் அமைப்பிடம் பற்றிய செய்தியொன்று சங்ககாலத்துப் பேரிலக்கியங்களுள் ஒன்றாகிய குறுந்தொகையின் கண்ணே புதையுண்டு கிடக்கின்றது. இவ் அரிய இலக்கியம் முதன்முதலாக, வேலூர் வூர்ஹீஸ் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராயிருந்த சௌரிப் பெருமாள் அரங்கனார் என்பவரால், தாமெழுதிய ஒரு புத்துரையுடன், 1915-ல் வெளியிடப்பட்டது. இவர் மூலபாடத்தைச் செப்பஞ்செய்தற்குப் பெருமுயற்சியை மேற்கொண்ட போதிலும், பலசெய்யுட்கள் இன்னும் திருந்த வேண்டியனவாகவே உள்ளன. ....
இலக்கிய தீபம்- 7
செய்யுளானது இயற்கையிற் சிறிதும் வழுவாதிருக்க வேண்டுமென்பது ஒரு கொள்கை. செய்யுள் சாமான்யவியற்கையில் வழுவாதிருக்க வேண்டு மென்பது தக்கதொரு நியமமாகாது; மனோபாவனையினாலும் கவித்துவ சக்தியினாலும் நெறிப்பட்டுச் சென்று கவித்துவ வுண்மையினை வெளிப்படுக்க வேண்டுமென்பது பிறிதொரு கொள்கை. இவ்விரு கொள்கைகள் பற்றிய விவாதமே மேற்குறித்த சரிதத்தின் உட்கிடை. உண்மைக் கவிதை இக் கொள்கைகளால் பாதிக்கப்படாது சிறந்து விளங்குமென்பது முடிவாக நாம் உணரத்தக்கது....
இலக்கிய தீபம் – 6
பதிற்றுப்பத்தின் இறுதிப்பத்து யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறை மீது பாடப்பெற்றது என ஊகிக்க இடமுண்டு. பெரும்பாலும் இது தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை ஜீவதசையிலிருந்தவனாகலாம். புறநானூறு தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை மரணமாகி விட்டான். எனவே புறநானூற்றின் முன்பாகப் பதிற்றுப்பத்துத் தோன்றியிருக்க வேண்டும்....
இலக்கிய தீபம் -5
பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டு என்னும் தொகுதியில் ஒன்பதாவது செய்யுள். இதன் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற் பெருவளத்தான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இது 301 அடிகளாலாயது. இந்நூலின் பெருமையைப் பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் உணர்ந்து 16 கோடிப்பொன் கண்ணனாருக்கு அளித்தான் என்று சொல்லப்படுகிறது.
இலக்கிய தீபம் – 4
செய்யுள் நடையினும் சங்ககாலச் செய்யுளும் பிற்காலச் செய்யுளும் தம்முள் மிகுதியும் வேறுபட்டுக் காணப்படும். பல்வகையவாகிய அணிகளையும் பூண்ட ஒரு மங்கை உலகிலுள்ள மக்களெல்லோரும் தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருப்பதாக எண்ணிக் கர்வத்தினால் மீதூரப் பட்டுக் குறுகுறு எனத் திரியும் நடைக்கும், அழகு மிகுந்த கற்புடைய மங்கை யொருத்தி கர்வமின்றிக் கண்டார் மனம் கனிவுறும்படி, எனினும் வேற்றெண்ணம் கொள்ள முடியாத வண்ணம் பரிசுத்தமான தோற்றத்தையுங் கொண்டு நடக்கும் நடைக்கும் எத்துணை வேறுபாடு உண்டோ, அத்துணை வேறுபாடு இவ்விருகாலத்துச் செய்யுள்கட்கும் உண்டாம். பிற்காலத்துச் செய்யுட்களிலே கருதிய பொருளைத் திறம்பட உரைப்பர்; ஆனால் சொல்லும் முறை மனத்தினை வசீகரிப்பதில்லை. அவை பார்ப்பதற்குத் தளுக்காக மிளிரும்; ஆனால் உண்மையினுயர்ந்த ரத்னங்களுக்குரிய நீர், ஒளி முதலியன அவற்றிற் காணக் கிடையா. அழகாகச் செய்யப்பட்டு அணிகலன்கள் பூட்டி நிரப்பிய மரப்பாவை ஒன்றினை யந்திரக் கயிற்றினால் ஆட்டுவிப்பது போலாம் அச்செய்யுளின் திறம். அவைகட்கு உயிரில்லை யென்றே சொல்லலாம்...
இலக்கிய தீபம் – 3
கூத்தர், பாணர், பொருநர் இவர்களைப் பற்றிய ஆற்றுப்படைச் செய்யுட்களும் புறநானூற்றிற் காணப்படுகின்றன. இவையெல்லாம் உலா வாழ்வு கருதிய (லௌகிகச்) செய்யுட்களாம். பாட்டுடைத் தலைவனிடத்துப் பொருள்பெற்று மீளலும், மீளும்வழியிற் கூத்தர் முதலியோரைக் காணுதலும், அவர்களைத் தலைவனிடம் வழிப்படுத்திப் பரிசில் கொள்ளச்செய்தலும் பண்டைக் காலத்து உலகியற் செய்திகளே. இவ்வாறான லௌகிக நோக்கங்களின் பொருட்டே ஆற்றுப்படைகள் தோன்றியிருத்தல் வேண்டும். வேறு நோக்கங்கள் தொடக்கத்தில் இல்லை. தொல்காப்பியர் வேறு நோக்கங்கள் குறித்து இவ்வகை நூல்கள் பிறக்கக் கூடுமெனக் கருதியவரே யல்லர். இஃது அவரது சூத்திரத்தால் தெளிவாகியுள்ளது. ஆற்றுப்படைகள் பெருவழக்கிலிருந்த காலத்தின் இறுதியில் வேறு நோக்கம் பற்றியும் அவை தோன்றுதல் பொருத்தமாகும் என்ற உணர்ச்சி உண்டாயிருத்தல் வேண்டும்....
இலக்கிய தீபம் – 2
பத்துப்பாட்டு என்பது மிகப் பழைய பத்துச்செய்யுட்கள் அடங்கிய ஒரு தொகுதி நூலின் பெயர். இப்பெயர் முதன்முதலில் மயிலைநாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்டு உளது. தொல் காப்பியத்திற்கு உரையிட்ட பேராசிரியர் இத்தொகுதியைப் 'பாட்டு' என்றே வழங்கினர் (செய்யுளியல் 50, 80, உரை). பத்துப்பாட்டுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு; இதன் கண் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரியது மதுரைக் காஞ்சி; இதன் கண் 782 அடிகள் உள்ளன....இந்நூல்கள் ஒருகாலத்தன்றிப் பல்வேறு காலத்திற் பல்வேறு இடத்தினராகிய பல புலவர்களால் இயற்றப்பட்டனவாம். இதுபற்றி ஐயுறுவாரில்லை; இது குறித்து ஆராய்வதும் வேண்டற்பாலதன்று. எனவே காலம் பற்றி எம்முறையில் இவை தோன்றின என்பதை அறுதியிடுவதே இங்கு நோக்கம்.