இன்றைய இந்தியாவின் முகங்கள் – 10

...பெருநாரையைக் காக்க பெண்கள் அணி திரண்டது. அதன் பெயர் ‘ஹார்ஜிலா ஆர்மி’. 2008-இல் அது தொடங்கப்பட்டது பத்தாயிரம் பெண்கள் இன்று அந்த அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி, பெருநாரைப் பாதுகாவலராகச் செயல்படுகின்றார்கள். கோயில் திருவிழாக்களில் இந்தப் பறவையைப் புகழ்ந்து பாடல்கள் பாடுகிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில் அதற்கென வளைகாப்புப் பாடல்கள் பாடப்படுகின்றன. படையல் சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமான பூர்ணிமாதேவி பர்மனை அவர்கள் ‘பெருநாரை சகோதரி’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். உலகில் அழிந்து வரும் அரிய வகை பறவை இனமான பெருநாரை இன்று செழித்து, பெருகி வருகிறது....

இன்றைய இந்தியாவின் முகங்கள் – 9

பாகிஸ்தான் எல்லையோரக் கிராமமொன்றில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சோதி, போரின் காரணமாக தில்லிக்கு குடிபெயர்ந்தவர்களில் ஒருவர். வரட்டி அடுப்பில் சுண்ட சுண்டக் காய்ச்சிய பாலைக் குடித்த நிலை மாறி, டில்லிக்கு வந்தபிறகு எவர்சில்வர் பாத்திரத்தில் பால் வாங்கிய நிலையை நினைவுகூரும் இவர், பின்னர் அதுவும் மாறி இரண்டு கி.மீ. நடந்து போய் வரிசையில் நின்று பால் வாங்கியதையும் அதுவும் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்பதையும் நினைவு கூர்கிறார். இவர் இன்று உலக பால் உற்பத்தி ஃபெடரேஷனின்  இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். பால் உற்பத்தி, பாதுகாப்பு, விநியோகம், மதிப்புக் கூட்டுதல், விற்பனை என அடிமட்டத்திலிருந்து அனைத்தையும் அனுபவத்தில் அறிந்தவர் இவர்.....

இன்றைய இந்தியாவின் முகங்கள் – 8

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது மாணவர்களுடன் கலந்துரையாடி, கேள்விகள் கேட்டு, அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படி ஒரு முறை (2006இல்) ஆந்திராவில் ஒரு பள்ளியில் மாணவர்களிடையே 'நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?' என்ற கேள்வியைக் கேட்டார். ஒரு மாணவர் எழுந்து நின்று 'இந்தியாவின் முதல் பார்வையற்ற ஜனாதிபதியாக விரும்புகிறேன்' என்று பதிலளித்தான். அவரது பெயர் ஸ்ரீகாந்த் பொல்லா. பிறவியிலேயே கண் பார்வையற்றவர்.....

இன்றைய இந்தியாவின் முகங்கள்- 7

18 ஆயிரம் அடி உயரத்தில் எதிரி. அங்கிருந்து ஆளுக்கொரு தோட்டா என்று துல்லியமாகக் கொல்ல முடிந்தது. அந்தக் கடினமான சூழ்நிலையில் உயிரைப் பணயம் வைத்து மலை மீதேறி எதிரிகளை வேட்டையாடிய இந்திய வீரர்களின் அபாரமான செயலைக் கண்டு உலகமே வியந்தது. இது நடந்தது 1999-இல் கார்கிலில்.  அந்தப் போரை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியவர் இந்திய ராணுவ தளபதியான ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக். அதன் பிறகு பல நாடுகளில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் ‘கார்கில் விஜயம்’ ஓர் அங்கமாக மாறியது....

இன்றைய இந்தியாவின் முகங்கள் – 6

சொத்து என்பது இறைவன் கொடுத்தது. அதை அப்படியே தன் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு போவதற்காகக் கொடுக்கவில்லை. சொத்தின் வலிமையே அதை பிறருக்குக் கொடுப்பதில் தான் உள்ளது என்று கூறுகிறார் மோகன்தாஸ் பை. இவர் சேர்த்ததை விடவும் அதிகம் இவர் கொடுத்தது... 2000-ஆம் ஆண்டில் இஸ்கான் உடன் இணைந்து இவர் செயல்படுத்தியது ‘அக்ஷய பாத்திரம்’ திட்டம். இத்திட்டத்தின் மூலம் கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கப்படுகிறது.

இன்றைய இந்தியாவின் முகங்கள் – 5

பிரம்மகுமாரிகள் அமைப்பினர் தரும் பயிற்சிக்கு ராஜயோகப் பயிற்சி என்று பெயர். கல்லூரிப் படிப்பின் துவக்கத்திலிருந்தே அந்தப் பயிற்சியைப் பெற்று பழகி வந்த ஷிவானி வர்மாவின் வாழ்வில் 2004-இல் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. அவர் தன் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம், தனக்கென ஒரு பணி இருப்பதை உணர்ந்தார். தன்னை ஆன்மாவாகவும், பேரான்மாவாக இறைவனின் இருப்பையும் உணர்ந்தார்.....

இன்றைய இந்தியாவின் முகங்கள் – 4 

தொழில் புரட்சியைப் போல யோகா ஒரு உலகப் புரட்சியை உருவாக்கி வருகிறது. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், இரண்டின் ஒருங்கிணைப்பு, அமைதி போன்றவற்றை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இயற்பியல் உலகு என்பது மாறி உணர்வை (Conscious) அடிப்படையாகக் கொண்ட பார்வை வளர்ந்து வருகிறது. இதற்கு டாக்டர் நாகேந்திராவின் பங்களிப்பு முக்கியமானது.

இன்றைய இந்தியாவின் முகங்கள்- 3

இந்திய விமானப் படையின் தென்மேற்கு பிராந்தியத் தலைவராக இருந்து (2018 ல்) ஏர் மார்ஷல் ரவீந்திரகுமார் தீர் ஓய்வு பெற்ற அடுத்த நாளே, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி இவரை மாநில அரசின் ஆலோசகராக நியமித்தார். டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் தொழிலுக்கான ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார். இன்று குஜராத்தில் தனியார் துறையில் பாதுகாப்பு சார்ந்த தொழிற்சாலைகள் பல துவங்கப்பட்டுள்ளன.

இன்றைய இந்தியாவின் முகங்கள்- 2

2013இல் நிதி நிறுவனங்களுக்கென (மியூச்சுவல் ஃபண்ட்) தனியாக ஒரு தளத்தை மும்பை பங்குச்சந்தையில் ஆஷிஷ் சௌஹான் அறிமுகம் செய்தார். அது மட்டுமன்றி சர்வதேச அளவிலான பங்குச்சந்தையை முதன்முதலில் இந்தியாவில் துவங்கினார். இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச், 2017 ஜனவரி மாதத்தில் குஜராத் மாநிலத் தலைநகரான காந்தி நகரில் துவங்கப்பட்டது. அதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.... இப்பொழுது என்எஸ்சி-யின் தலைவராக உள்ள விக்ரம் லிமாயின் பதவி ஓரிரு மாதங்களில் முடிவுறுகிறது.அடுத்த போட்டியாளர்களில் முன்னணியில் இருப்பவர், சர்வதேச அளவில் இந்தியாவின் முகமாக இருக்கும் ஆஷிஷ் சௌஹான்....

இன்றைய இந்தியாவின் முகங்கள்-1

உலகம் முழுவதும் கொரானா தொற்றுப் பரவி பாதிப்பை ஏற்படுத்திய போது அதற்கு தடுப்பூசியை ஓராண்டுக்குள் கண்டுபிடித்து, நம்மவருக்கு மட்டுமல்ல - உலகெங்கும் இலவசமாகவும் மிகக் குறைந்த விலையிலும் கொடுத்து சாதனை படைத்தது மோடி அரசு. அந்தச் சாதனைக்குப் பின்னால் இருந்தது பாரத் பயோடெக் நிறுவனம். அதைத் துவங்கியவர் டாக்டர் கிருஷ்ண எல்லா-வும் அவரது மனைவி டாக்டர் சுசித்ரா எல்லா-வும்.