தமிழ் வளர்ப்பு – பாரதி விடுத்த கோரிக்கை

மகாகவி பாரதி தாம் எழுதிய கவிதை, கட்டுரை, கதைகளை நூலாக்க வேண்டுமென்ற அதீத தாபம் கொண்டிருந்தார். ஆனால், அடிமை இந்தியாவில் அதற்கான சூழல் அவருக்கு வாய்க்கவில்லை. அவரது நிலையோ அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலை. எனவே, தமிழ் வளர்ப்புப் பண்ணை என்ற பெயரில் தமது நூல்களை வெளியிட முன்பதிவுத் திட்டம் போன்ற ஒரு நிதி முதலீட்டுத் திட்டத்தை நடத்த விழைந்தார். அந்த தமிழ் வளர்ப்புப் பண்ணை சார்பில் வெளியான விளம்பரம் இது. இந்த விளம்பரச் செய்தியை மகாகவி பாரதியே எழுதினாரா என்பது உறுதியாகாத தகவல். அதேசமயம், அக்காலத்தில் பாரதியின் துடிப்பு மிகு எழுத்தார்வத்துக்கு அற்புதமான ஆதார ஆவணம் இது…

பொருள் புதிது – பொங்கல் மலர்- 2023

பொருள் புதிது பொங்கல் மலர்- 2023-இல் இடம் பெற்றுள்ள படைப்புகளின் பட்டியல்....

சான்றோர் பார்வையில் சுவாமி விவேகானந்தர்

திலகர் முதல் தாகூர் வரையிலான தேசத் தலைவர்கள் பலரின் சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...

பொருள் புதிது – தீபாவளி மலர் 2022

அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! பொருள் புதிது - தீபாவளி மலர் 2022இன் உள்ளடக்கம்.... (தலைப்பைச் சொடுக்குக!)

வில்லிசை வித்தகர் விண்ணில் கலந்தார்!

இனி அப்படி ஒருவரை நாம் காண்பதற்கில்லை. கத்தியை மிஞ்சும் புத்திக் கூர்மையும், கடவுளே நாணும் குழந்தைத் தூய்மையும் கலந்திருக்கும் ஒருவரை எங்கே காணப் போகிறோம்? அந்தத் தாமிரபரணி தந்த தங்கத் தமிழ்ச் சொற்கள் அலைபுரளும் லாகவத்தை எவரிடம் பார்க்கப் போகிறோம்? என்ன கவிதை! என்ன நகைச்சுவை! என்ன சரளம்! எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்தப் பேரன்பு!