விவேகானந்தரும் அரவிந்தரும் அருளிய மறுமலர்ச்சி

திருமதி பிரேமா நந்தகுமார் (83), நாடறிந்த பேச்சாளர்; பாரதி ஆய்வாளர்; ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல நூல்களை எழுதி இருக்கிறார். ‘சுப்பிரமணிய பாரதி, இந்தியப் பண்பாட்டுக் கருவூலம் – உலக ஆன்மிகச் செல்வம், இந்தியத் தத்துவம், சரித்திரம் மற்றும் பண்பாடு’ போன்ற ஆய்வேடுகள் இவரது சிறப்பான பங்களிப்புகளாகும். நமது தலத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இரண்டாவது கட்டுரை இது….

அரவிந்தரின் புதிய தேசியம்

மகரிஷி அரவிந்தரின் 150வது ஆண்டை ஒட்டி, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியான பேராசிரியர் மகரந்த். ஆர். பராஞ்சபே அவர்களின் ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் மீள்பதிவாகிறது.

விடுதலைப் போரில் அரவிந்தர்- 11

 “தெய்வீக செய்தியைப் பற்றி மக்கள் பொதுவாகவே தெளிவற்றிருக்கிறார்கள். தெய்வீகக் கட்டளையை நாம் வேறுபடுத்தித் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுள் நம்மிடம் பல வழிகளில் பலவிதமாக பேசுகிறார். அதெல்லாம் தெய்வீக கட்டளை அல்ல. அது வரும்போது மிகத் தெளிவாகவும் மறுக்க முடியாததாகவும் இருக்கும். அது உங்கள் அறிவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் மனம் அதை ஏற்று கீழ்படிந்தேயாக வேண்டும். அப்படிப்பட்டதொரு தெய்வீக கட்டளை கிடைத்துதான் நான் பாண்டிச்சேரிக்கு சென்றேன்”.

விடுதலைப் போரில் அரவிந்தர்- 10

“ஹிந்து மதம் என்றால் என்ன? சாஸ்வதமானது என்று நாம் அழைக்கும் சனாதன மதம் என்பது எது? முப்புரமும் கடல்களால் சூழப்பட்டு இமயமலையை ஒருபுறம் கொண்ட பழமையான இந்தப் புண்ணிய பூமி ஹிந்து தேசம். இந்த தேசத்தில் ஆரிய இனத்தவரால் காலம் காலமாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால் இது ஹிந்து மதம். ஆனால் இது ஒரு தேசத்துக்குள்ளோ அல்லது புவிப் பரப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள்ளோ கட்டுப்பட்டதல்ல. நாம் ஹிந்து மதம் என்று சொல்வது உண்மையில் எப்பொழுதும் இருக்கக்கூடிய மதம். ஏனெனில் அது எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளும் உலக மதம். எந்த ஒரு மதமும் எல்லாக் காலத்திற்கும் ஏற்புடையதாக இல்லாவிட்டால் அது உலக மதமாக, உலகம் தழுவிய மதமாக இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான, குறுகலான மதம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, ஒரு குறிப்பிட்ட நோக்கம் நிறைவேறும் வரையில் மட்டுமே உயிருடன் இருக்கும்”....

விடுதலைப் போரில் அரவிந்தர் – 9

“அலிப்பூர் அரசு ஹோட்டலை (சிறைச்சாலை) பற்றி நான் கொடுத்த மேற்கண்ட விவரங்களை எல்லாம், நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதற்காகச் சொல்லவில்லை. நாகரிகம் மிகுந்த பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் விசாரணைக் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பான ஏற்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காகத் தான். நிரபராதிகளுக்கு எவ்வளவு நீண்ட மனஉளைச்சல்! நான் விவரித்த கஷ்டங்கள் அங்கு இருந்தன என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் இறைவனின் கருணை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. நான் கொஞ்ச நாட்கள்தான் கஷ்டப்பட்டேன். பிறகு என் மனம் எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளவும், அதை உணராதபடிக்கு மேலெழவும் தொடங்கியது. அதனால்தான் என் சிறை வாழ்க்கையை கோபமும் சோகமும் இல்லாமல் அதை நினைத்து சிரித்தபடி என்னால் எழுத முடிகிறது”.....

விடுதலைப் போரில் அரவிந்தர்- 8

....இது சூரத் காங்கிரஸ் மாநாடு பற்றி வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். ஆனால் அதற்கு பல காலம் கழித்து ஒரு சீடரின் கேள்விக்கு அரவிந்தரின் பதிலில், "திரைக்குப் பின்னால் நடக்கும் உறுதியான செயல்களைப் பற்றி வரலாறு எப்போதும் பதிவு செய்வதில்லை. திரைக்கு முன்னால் வெளிப்படையாக நடக்கும் விஷயங்களை மட்டுமே அது பதிவு செய்கிறது. மிதவாதிகளுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றும், காங்கிரசைப் பிளக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டது நான் தான். இந்த முடிவை திலகரைக் கலந்தாலோசிக்காமல் நானே சுயமாக மேற்கொண்டேன். இதை வெகு சிலரே அறிவார்கள்" என்று எழுதியுள்ளார்.....

விடுதலைப் போரில் அரவிந்தர்-7

"தேசத்தின் முன்பு விதி ஒரு பணியை, ஒரு லட்சியத்தை முன்வைக்கும் போது, அந்த ஒரு பணியின், லட்சியத்தின் முன்பு மற்ற எல்லாவற்றையும், அவை எவ்வளவு தான் உயர்ந்ததாக மேன்மையானதாக இருந்தாலும் அவை அனைத்தும் தியாகம் செய்யப்பட வேண்டும். இப்பொழுது நம் தாய்நாட்டிற்கு அதுபோன்றதொரு தருணம் வந்துள்ளது. நாம் அவளுக்குப் பணி செய்ய வேண்டும். நமது எல்லாச் செயல்களும் தேச சேவையை நோக்கியதாகவே இருக்க வேண்டும். நீங்கள் கற்பதாக இருந்தால் அவளுக்காகவே கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உடல், மனம், ஆன்மாவை அவளது சேவைக்காகத் தயார்படுத்துங்கள். அவளுக்காக வாழ்வது மட்டுமே உங்கள் ஊதியமாகட்டும். நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவளுக்கு சேவை செய்யவே அறிவைத் திரட்டி வாருங்கள். அவள் வளம் பெற பணிபுரியுங்கள். அவள் மகிழ்ச்சி அடைவதற்காக நீங்கள் கஷ்டப்படுங்கள். இந்த ஒரு அறிவுரையிலேயே எல்லாம் அடங்கி உள்ளது"...

விடுதலைப் போரில் அரவிந்தர்- 6

அரவிந்தர் வன்முறையற்ற அகிம்சை முறையை மட்டுமே விரும்பினார் என்று கூற முடியாது. "சமூகப் போராட்டம் சில சந்தர்ப்பங்களில் போராக மாறிவிடும். போர்க்காலத்தின் தார்மீகமும், அமைதியான நேரத்திற்கான தார்மீகமும் வெவ்வேறானவை. சில சந்தர்ப்பங்களில் ரத்தம் சிந்தவோ வன்முறையில் ஈடுபடவோ தயங்குவது பலவீனமே. குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனன் பெரும் அழிவு ஏற்படுமெனத் தயங்கியபோது ஸ்ரீ கிருஷ்ணர் அவரை இடித்துரைத்துக் கூறியது இதைதான்" என்று அரவிந்தர் எழுதியிருந்தார்....

விடுதலைப் போரில் அரவிந்தர்- 5

”வீழ்ச்சி அடைந்த இந்த இனத்தை தூக்கி நிறுத்தும் வல்லமை எனக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். அது உடல் வலிமை அல்ல, அறிவு வல்லமை. ஷத்திரிய சக்தி மட்டுமே வல்லமை அல்ல. பிராமண சக்தியும் உள்ளது. அது அறிவை அடிப்படையாகக் கொண்டது. இது எனக்கு புதியதாக ஏற்பட்ட உணர்வு அல்ல. இது நான் பிறக்கும்போதே என் எலும்பு மஜ்ஜையில் உள்ள உணர்வு. இறைவன் இந்த மாபெரும் விஷயத்தை சாதிப்பதற்காகவே என்னை உலகிற்கு அனுப்பியுள்ளார். எனக்கு பதினான்கு வயதிருக்கும்போது இந்த விதை முளைக்கத் தொடங்கியது. பதினெட்டு வயதில் அடித்தளம் அசைக்க முடியாதபடி உறுதிப்பட்டது”... அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தின் வாசகங்கள் இவை....

விடுதலைப் போரில் அரவிந்தர்- 4

சமஸ்கிருதத்தை அவரே சுயமாக கற்கத் தொடங்கினார். அவர் இங்கிலாந்தில் இருந்தபோது ஐசிஎஸ் படிப்புக்காக கிரேக்க, லத்தீன் மொழிகளை அப்படித்தானே கற்றார்? அதேபோல மற்றொரு செம்மொழியான சம்ஸ்கிருதத்தையும் தானே முயன்று கற்றார். எந்த அளவுக்கு என்றால், வேதத்தைப் படிப்பதுடன், அந்த புராதன பிரதியை தனது யோக கண்ணோட்டத்தில் புதுவிதமாக விளக்குமளவுக்கு  அதில் வல்லமை பெற்றார். மொழிகளைக் கற்றுக் கொள்வதில் அரவிந்தருக்கு இருந்த ஆர்வம் காரணமாக குஜராத்தி, மராட்டி, வங்க மொழி ஆகியவற்றில் திறம் பெற்றவரானார்....

விடுதலைப் போரில் அரவிந்தர் -3

‘இந்தியா மஜ்லிஸ்’ என்பது இந்திய மாணவர்களுக்கான அமைப்பு. ஆரம்பத்தில் அது சோசியல் கிளப் போல தொடங்கப்பட்டாலும் அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்கள் சந்திக்கும் இடமாகியது. இந்திய அரசியல் பற்றிய கருத்துரைகளும் வாதப் பிரதிவாதங்களும்  நடக்கும் இடமானது. அனல் பறக்கும் பேச்சுக்களும் கடுமையான மோதல்களை வெளிப்படுத்தும் அரசியல் விவாதங்களும் அங்கு தொடர்ந்து நடந்து வந்தன. அரவிந்தரும் அந்த விவாதங்களில் கலந்துகொண்டு ஆவேசமாகப் பேசியுள்ளார். அப்போது அவர்  ‘தாமரையும் குத்துவாளும்’ என்ற ரகசிய அமைப்பில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக உழைக்க சபதம் எடுத்துக் கொண்டார். அவருடைய கருத்துக்கள் மிகவும் தீவிரமான அரசியலையும் ஆங்கிலேய அரசு எதிர்ப்பையும் வெளிப்படுத்தின. அந்த அமைப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஆனாலும் ஆங்கில அரசு அதைக் கண்காணித்து வந்தது.....

விடுதலைப் போரில் அரவிந்தர் – 2

அரவிந்தர் 1879 முதல் 1893 வரை பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் இருந்தார். முதல் ஐந்தாண்டுகள் மான்செஸ்டரில், அடுத்த ஆறு ஆண்டுகள் லண்டனில், கடைசி மூன்றாண்டுகள் கேம்பிரிட்ஜில் இருந்தார். எப்போதாவது வீட்டில் இருந்து வரும் கடிதம், நாளிதழ்களில் வரும் செய்தி, கேம்பிரிட்ஜில் இருந்தபோது ஏற்பட்ட சில அறிமுகங்கள், என்பதைத் தவிர தாயகத்தோடு அவருக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. பாரதம் பற்றி, அதன் மக்கள் பற்றி, அதன் பண்பாடு பற்றி, சமயம் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் வளர்ந்தார். ”அந்த விஷயத்தில் முற்றிலும் அறியாமையில்தான் இருந்தேன்” என்று அவர் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்....

விடுதலைப் போரில் அரவிந்தர் – 1

சுதந்திர இந்தியா உருவாகப் பாடுபட்ட விடுதலை வீரர்களுள் வங்கத்தைச் சார்ந்த மகரிஷி ஸ்ரீ அரவிந்தர் முக்கியமானவர். புரட்சிவீரராக வாழ்வைத் துவங்கி, குறுகிய காலத்தில் நாடு முழுவதும் விடுதலை வேட்கையை தீப்போலப் பரப்பியவர் அவர். ஆனால், பின்னாளில் போராட்ட வாழ்விலிருந்து விலகி, ஆன்ம விடுதலைக்கான பயணத்தையும் உலக ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளையும் பாண்டிசேரியில் இருந்தபடி தொடர்ந்தார். சிறந்த இயக்க நிர்வாகி, விடுதலைப் போராளி, கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர், ஆன்மிகவாதி எனப் பன்முகம் கொண்டு இலங்கியவர் மகரிஷி ஸ்ரீ அரவிந்தர். திலகருக்குப் பின் இந்திய சுதந்திரப் போரை வழிநடத்தி இருக்க வேண்டிய மகத்தான ஆளுமையான அரவிந்தர் ஆன்மிக விடுதலை நோக்கி நகர்ந்தது, இறைவன் சித்தம் போலும். இந்த ஆண்டு மகரிஷி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினத்தின் 150வது ஆண்டு நிறைகிறது (1872- 2022). இவரது பிறந்த நாளில் தான் பாரதம் 1947இல் சுதந்திரம் பெற்றது. இதையொட்டி, நமது இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார் அரவிந்தரின் வாழ்க்கை சரிதத்தை சுருக்கமாக இங்கே தொடராக எழுதுகிறார். சுதந்திர நன்னாளில், மகரிஷி அரவிந்தரின் பிறந்த நாளிலேயே இத்தொடர் இங்கு தொடங்குகிறது.இரண்டு நாட்கள் இடைவெளியில் இத்தொடர் நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும்.

புறப்பாடு ஒரு புதிர்

மனிதனின் உடல்ரீதியான பரிணாம வளர்ச்சி முற்றுப் பெற்றுவிட்டது. அடுத்தக்கட்ட வளர்ச்சி மனித மனத்தை அதிமனமாக்குவது. அதற்கு இறை சக்தியை மனித மனத்தில் இறக்குவது என்பது அரவிந்தரின் ஆன்மிக தரிசனம். அதற்காக மனித மனத்தையும் உடலையும் தயார் படுத்துவது என்பது அவரது பணி. இறை சக்தியை இறங்குவதற்கான மையமாக, முதலில், அவர் தன்னை ஆக்கிக் கொண்டார். அவர் தொடர்பில் வந்தவர்கள் மூலம் அந்த சக்தி பகிரப்பட்டது. எழுத்துக்கள், பேச்சுக்கள் மூலம் அவரது தரிசனம் பரவியது....

அரவிந்தர் கிறிஸ்தவரான கதை

அரவிந்தர் யோக மார்க்கத்தில் பயணித்தபோது இறைவழிபாட்டில் ஈடுபட்டவர் அல்லர். துர்க்கை துதியை அவர் எழுதியிருந்தாலும், அது இறைவியைத்  துதிப்பதற்காக  எழுதப்பட்டதல்ல; பாரத தேசம் விடுதலை பெற வேண்டும்,  அதற்கான சக்தியை பாரத மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக  எழுதினார். அவர் வழிபடுவதற்காக கோயிலுக்குச் சென்றதில்லை; சடங்குகளைச் செய்தவர் அல்ல; மாறாக பகட்டான இறை பக்தியை கிண்டல் செய்தவர்.