தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் (நேஷனல் கமிஷன் ஃபார் சஃபாய் கரம்சாரிஸ் – என்சிஎஸ்கே) என்ற அரசு சார் அமைப்பின் தலைவரான திரு. ம.வெங்கடேசன் எழுதிய கட்டுரை இது…
Tag: அம்பேத்கர்
அம்பேத்கர் பார்வையில் கம்யூனிஸம்
1951 அக்டோபர் 6-இல் ஷெட்யூல்டு வகுப்பின் சம்மேளன செயற்குழு கூட்டத்தில், ‘தனிப்பட்டவரின் சுதந்திரம், நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்து, அதற்கு பதிலாக, எதேச்சாதிகாரத்தைக் கொண்டு வருவதை லட்சியமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடன் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் எந்த உறவையும் வைத்துக் கொள்ளாது’ என்பதை டாக்டர் அம்பேத்கர் தெளிவுபடுத்தினார்....
அம்பேத்கரும் தேசியமும்
தீண்டத்தகாதவர்களைப் பாதுகாக்கும் தன் நடவடிக்கையை தனது தேசபக்தி நிலைப்பாட்டிலிருந்தே அம்பேத்கர் அணுகினார். அதேபோல, விடுதலைப் போராட்டத்தையும் தலித் கண்ணோட்டத்துடன் அணுகினார் அவர். விடுதலைப் போராட்டக் களத்தில் சமூகநீதியும் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய அம்சங்களாக மாறக் காரணம் ஆனவர் அவரே....குடிமக்களே தேசம் என்பதை முழுமையாக உணர்ந்தால் மட்டுமே, குடிமக்களின் ஒரு பகுதியான தீண்டப்படாதாரின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் வேட்கை புரியும். இந்தத் தேசம் வலுப்பெற வேண்டுமானால், அம்பேத்கரின் அடியொற்றி சமூக ஒருமைப்பாட்டை நாம் வலுப்படுத்தியாக வேண்டும். அதுவே இன்றைய தேவை. (நமது தளத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்த 5வது கட்டுரை இது... பத்திரிகையாளர் சேக்கிழான் எழுதியது)....
விவேகானந்தரும் அம்பேத்கரும்
சுவாமி விவேகானந்தரும் அண்ணல் அம்பேத்கரும் மானுடத் துன்பத்தைக் கண்டு ரத்தம் சிந்தும் இதயம் உடையவர்களாக இருந்தனர். மானுடத் துன்பத்தைத் துடைக்க பாரத மரபிலிருந்து தீர்வுகளை நாடினர். அதற்காகவே தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தனர். தங்கள் சுய விடுதலையைத் துறந்து அதற்காக உழைத்தனர்...ன்றானது அதிசயமல்லவே.... (நமது தளத்தில் அம்பேத்கர் குறித்த 4வது கட்டுரை இது... ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன் எழுதியது)...
அம்பேத்கரின் நூல்கள்
‘கல்வி, பொது சுகாதாரம், சமூக ஆரோக்கியம், வீடு ஆகியவை அடிப்படைத் தேவைகள்’ என்கிறார் அம்பேத்கர். குடும்பக் கட்டுப்பாடு, தேச வளர்ச்சிக்கு அவசியம். பெண்களுக்கு சமஉரிமை அளிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலாளர்கள், ஜாதி ரீதியாகப் பிரிந்திருப்பது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. சுதந்திரப் பொருளாதார முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
(நமது தளத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்த 3வது கட்டுரை- திருநின்றவூர் ரவிகுமார் எழுதியது)...அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு
சமஸ்கிருத மொழியின்மேல் அண்ணல் அம்பேத்கருக்கு என்றைக்குமே வெறுப்பில்லை. சமஸ்கிருத மொழி இந்த பாரத தேசத்தின் மொழியாக, தேசிய மொழியாக வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். தனக்கு வாய்ப்புக் கிடைத்த போது அதை நிரூபித்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அரசியல் சட்ட நிர்ணய சபை விவாதத்தில் கலந்துகொண்ட அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் வர வேண்டும் என்ற தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இதுபற்றி பிடிஐ நிருபர், நீங்கள் சமஸ்கிருதத்திற்கு ஆதரவு தெரிவித்தீர்களாமே என்று அம்பேத்கரிடம் கேட்டபோது, ஆம், அதில் என்ன தவறு இருக்கிறது? என்று அந்த நிருபரைப் பார்த்து கேள்வி கேட்டார். (நமது தளத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்த இரண்டாவது கட்டுரை இது... தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் ம.வெங்கடேசன் எழுதியது)....
அம்பேத்கர் பார்வையில் சமுதாயம்
அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு, சட்டமேதை, சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் உள்ளிட்ட வெவ்வேறு விதமான பரிணாமங்கள் இருந்தபோதும், அடிப்படையில் அவர் ஒரு பொருளாதார நிபுணர்....வறுமையை ஒழிக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதைப் பொருளாதாரத்தின் முக்கியமான நோக்கங்களாகக் கருதினார். அவரது சிந்தனைகள் சாமானிய மக்களின் சிரமங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது பற்றியதாகவுமே இருந்தது... (நமது தளத்தில் அம்பேத்கரை அறிமுகம் செய்யும் முதல் கட்டுரை இது- பேரா.ப.கனகசபாபதி எழுதியது)...