மழை

ஒரு நாளில் நாம் எத்தனையோ நிகழ்வுகளைக் காண்கிறோம். அவற்றில் நாமே பாத்திரமாகவும் பங்கேற்கிறோம். அவற்றை பிறர் ருசிக்கும் வகையில் எழுத்தில் பதிவு செய்யும் கலை அனைவர்க்கும் வாய்ப்பதில்லை. இதோ, மகாகவி பாரதி தனது அனுபவத்தை எத்துணை அற்புதமாக அரிய கவிதையைச் செருகி கதையாக்கி இருக்கிறார், பாருங்கள்! “மழை வர்ஷமாகச் சொரிந்தது. ராமராயரும், பிரமராய அய்யரும் மற்றோரும் குடல் தெறிக்க ஓடி வந்து சேர்ந்தார்கள். நானும் வேணு முதலியாரும் கொஞ்சம் நனைந்து போயிருந்தோம். மற்றவர்கள் ஊறுகாய் ஸ்திதியில் இருந்தார்கள்.” என்ற வர்ணனையை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.... அவரது மேதமை புரியும்!

தராசு கட்டுரைகள்- 9

ஆங்கிலேயர்:- இந்த யுத்தம் முடிந்த பிறகு ஐரோப்பாவிலே என்ன மாறுதல்கள் தோன்றும்? தராசு:- தொழிலாளிகளுக்கும், ஸ்திரீகளுக்கும் அதிக அதிகாரம் ஏற்படும். வியாபாரிகளுக்குக் கொஞ்சம் சிரமம் ஏற்படலாம். கிழக்குத் தேசத்து மதக் கொள்கைகள் ஐரோப்பாவிலே கொஞ்சம் பரவலாம்.

அபயம்

காரணம் இல்லாமல் மகாகவி பாரதி எதுவும் எழுதவில்லை. இக்கதையை ஏன் எழுதியிருப்பார்?

தராசு கட்டுரைகள்- 8

தராசு சொல்லுகிறது:- புராணங்கள் முழுதும் சரித்திரமல்ல; ஞான நூல்கள்; யோக சாஸ்திரத்தின் தத்துவங்களைக் கவிதை வழியிலே கற்பனைத் திருஷ்டாந்தங்களுடன் எடுத்துக் கூறுவன. இவையன்றி நீதி சாஸ்திரத்தை விளக்கும்படியான கதைகளும் அந்நூல்களில் மிகுதியாகச் சேர்ந்திருக்கின்றன. சரித்திரப் பகுதிகளும் பல உண்டு. இவ்வாறு பல அம்சங்கள் சேர்ந்து ஆத்ம ஞானத்துக்கு வழிகாட்டி, தர்மநியதிகளை மிகவும் நன்றாகத் தெரிவிப்பதால் அந்த நூல்களை நாம் மதிப்புடன் போற்றி வருதல் தகும்....

அர்ஜுன சந்தேகம்

ஒரே கேள்விதான். ஆனால் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு பதில்கள். ஆனால் அனைத்திலும் லோக நன்மை தான் பிரதானம். இது சிறிய கதை தான். ஆனால், இந்த சிரு வித்துக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் பிரமாண்டமானது.

தராசு கட்டுரைகள்- 7

மேலும் அறிவுத் தராசு போட்டு, உலக வாழ்க்கையின் விதிகளையும், சிரமங்களையும், நிறுத்துப் பார்ப்பதே உனது தொழிலென்பதை மறந்து, வேறு முயற்சிகளிலே சிந்தை செலுத்துகிறாய். புலி பசித்தால் புல்லைத் தின்னுமா? வயிர வியாபாரி ஒரு மாதம் நல்ல வியாபார மில்லாவிட்டால் மொச்சைக் கொட்டைச் சுண்டல் விற்கப் போவானோ? காளிதாசா, கவனத்துடன் கேள். ...

குதிரைக் கொம்பு

மகாகவி பாரதி காலத்திலேயே ஹிந்துப் புராணங்களையும் இதிகாசங்களையும் மனம் போன போக்கில் எழுதி தூஷிக்கும் கும்பல் இருந்தது. இன்று தமிழகத்தில் இருக்கும் நாத்திகக் கும்பலின் தொடக்கம் அது. அநேகமாக மகாகவி பாரதி அயோத்திதாச பண்டிதரின் புளுகுமூட்டைகளைப் படித்திருப்பார் போலிருக்கிறது. ‘குதிரைக்கொம்பு’ என்னும் இந்தச் சிறுகதை வேடிக்கையாக எழுதப்பட்டிருந்தாலும், இப்படிச் சிந்திக்கும் முட்டாள்களும் இருப்பதையே பாரதி பகடியாகப் பதிவு செய்திருக்கிறார்....

தராசு கட்டுரைகள்- 6

தராசு சொல்வதாயிற்று:- தருகிறேனென்று சொல்லும்போதே பின்னிட்டுத் தம்மால் கொடுக்க முடியாதென்பதை அறிந்துகொண்டு சொல்வோர் புழுக்கள். அவர்களைப் படுக்கவைத்துக் கைகால்களைக் கட்டி மேலே ஒரு மூட்டை கட்டெறும்பைக் கொட்டிக் கடிக்கவிட வேண்டும். தருகிறேனென்று சொல்லும்போது உண்மையாகவே கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சொல்லிவிட்டுப் பின்பு சௌகர்யமில்லாமையால் கொடுக்காதிருப்போர் முன்யோசனையற்றவர்கள். இவர்களை நல்ல சவுக்கினால் இரண்டடி அடித்துவிட்டுப் பின் முகதரிசனமில்லாமல் இருக்க வேண்டும்.

இருள்

கடமையைச் செய்- செய்துகொண்டே இரு. இதுவே மகாகவி பாரதியின் இக்கதை உபதேசிக்கும் மந்திரம்.

தேவ விகடம்

தேச விடுதலை, சமூக சீர்த்திருத்தம், தமிழ் மீது தணியாத பற்று, பண்பாட்டுச் சீரழிவு குறித்த கவலை, உலக நாடுகளின் வளர்ச்சி - என்றெல்லாம் ஓயாமல் சிந்தித்தும் எழுதியும் வந்த மகாகவி பாரதியின் மனதில் இருந்த குழந்தைத்தனமும் நகைச்சுவை உணர்வும் இக்கதையில் வெளிப்படுகின்றன...