பொருள் புதிது – பொங்கல் மலர்- 2023

பொருள் புதிது பொங்கல் மலர்- 2023-இல் இடம் பெற்றுள்ள படைப்புகளின் பட்டியல்....

செங்கதிர்த்தேவன்!

விஸ்வாமித்திர முனிவரால் இயற்றப்பட்ட இந்த இருவரிக் கவிதை,  ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. வேதங்களில் மிகவும் பழமையான  ரிக் வேதத்தில், மூன்றாவது மண்டலத்தில் (3.62.10)  இடம்பெற்றுள்ளது. உலகின் இயக்கத்துக்கு ஆதாரமான சூரியனைப் பிரார்த்திப்பதே இம்மந்திரத்தின் அடிப்படை....

அவரது கனவுகளை நனவாக்க உழைப்போம்!

2012,  ஜூலை 4-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தில், குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோடி இருந்தபோது தனது இணையதளத்தில் எழுதிய  கட்டுரை இது...

காலம் பிறக்கட்டும்! (கவிதை)

கதிர்கள் தலையை அசைக்கக் காற்றில் கவிதை பரவட்டும்! கனவுகள் கண்முன் நனவாய்க் காணும் காலம் பிறக்கட்டும்!

ஞாயிறு போற்றுதும்:  மோதேரா சூரியன் கோயில்

சௌராஷ்டிராவை (குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) ஆண்ட (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனால் மோதேரா நகரத்தில், பொ.யு. 1026 இல் கட்டி முடிக்கப்பட்டு, சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.... 7 குதிரைகள் இழுத்துச்செல்லும் தேரின் மீது தனது மனைவியர் சஞ்சனா, சாயா சூழ நின்று காட்சியளிக்கும்  சூரிய தேவன் சிற்பங்களின் எழிலில் நம் மனம் லயித்து விடுகிறது.

ஆன்மிகமும் தேசியமும்

இந்தியாவின் அடையாளம் ஆன்மிகமே என்பார் சுவாமி விவேகானந்தர். அவரது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி எழுதும் மகரிஷி அரவிந்தர், இந்திய ஆன்மிகத்தின் புதிய ஒளியாக ராமகிருஷ்ணரை வர்ணிக்கிறார். அவரது அற்புதமான கட்டுரை, இங்கே இனிய தமிழில்…

பார் போற்றும் பரிதிக் கடவுள்

தமிழர் திருநாள் என்று சிறப்பித்துப் போற்றப்படும் தைப் பொங்கல் விழா, அடிப்படையில் ஒரு தேசியத் திருநாள் ஆகும். மகர மாதம் என்று அழைக்கப்படும் இந்தத் தை மாதத்தின் முதல் நாளன்றுதான், சூரியனின் ஒளி மிகுந்த வடதிசைப் பயணமான உத்தராயண புண்யகாலம் தொடங்குகிறது. ஆகையால் தைப் பொங்கல், மகர சங்கராந்தி என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாகவும் திகழ்கிறது. நமது ஹிந்து தர்மத்தின்படி, பண்பாட்டின்படி ஞாயிறு பிரத்யட்சக் கடவுளாக -  அதாவது கண்ணால் காணப்படும் கடவுளாகத் திகழ்கிறார். “ஞாயிறு போற்றுதும்” என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்டுள்ள அந்த சூரியக் கடவுள், காயத்ரி ஜபத்தின் மூலம் துதிக்கப்படும் அந்தக் கதிரவத் தெய்வம், எவ்விதம் உலகமெல்லாம் வணங்கப்படும் தெய்வமாக விளங்குகிறார் என்பதை, தைப் பொங்கல் திருநாளை ஒட்டி விளக்கும் விதமாக,  மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் இந்தக் கட்டுரையை வழங்கி உள்ளார்.

கவியரசரின் தைப்பாவை

கவியரசருக்கு சமய இலக்கியங்களில் இருந்த திளைப்பு அவருக்குள் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்ததன் விளைவாக, திருப்பாவை,  திருவெம்பாவை ஆகியவற்றை அடியொற்றி அவர் படைத்ததே  தைப்பாவை. சங்க இலக்கிய சாரத்தையும் சமய இலக்கிய உத்தியையும் ஒருசேர  வெளிப்படுத்தும் தைப்பாவை, கவியரசு கண்ணதாசனின் முத்திரைப்  படைப்புகளில் முக்கியமானது.

வெண்ணெய் கைவசம் இருக்க நெய் தேடி அலையலாமா?

மூத்த தமிழ் இதழாளர் திரு. எஸ்.எஸ்.மகாதேவன், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை மேம்படுத்துவது எப்படி என்று இக்கட்டுரையில் ஆராய்கிறார்....

வீரத் துறவி (கவிதை)

நாமக்கல் கவிஞர் திரு. வெ.ராமலிங்கம் பிள்ளை, மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் மரபுக் கவிதை உலகில் கோலோச்சியவர்; தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்; தமிழகத்தில் தேசியம் வளர்க்க பாடுபட்டவர். 1863-ஆம் ஆண்டு மகர சங்க்ராந்தி நன்னாளில் (அன்று ஆங்கிலத் தேதி: 1863, ஜன. 12) அவதரித்த சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும் வகையில், அவரைப் பற்றிய நாமக்கல் கவிஞரின் கவிதை இங்கே வெளியாகிறது….

தமிழ் சினிமாவின் தடுமாற்றம்

தமிழ்த் திரையுலகில் ஏதோ ஒரு நாசசக்தி புகுந்துவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த தமிழ் சினிமா தற்போது, பிரிவினைவாதம், அரசு எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு எனத் தடம் புரண்டு விட்டது. இதன் பின்னணி என்ன? அத்துறையிலேயே தனது இருப்பை நிலைநாட்டப் போராடிக் கொண்டிருக்கும் உதவி இயக்குநரான திரு. சின்னப்பா கணேசன் காரணங்களை அலசுகிறார்….

மராமரப்  படலம்

பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு. ச.சண்முகநாதன், கம்ப ராமாயணத்தில் தன் மனதைப் பறிகொடுத்தவர்; தனது எழுத்துகளால் நம்மை வசீகரிப்பவர். இதோ அவரது இனிய கட்டுரை....

ஒரு வேலையை செய்யத் தெரிவதும், செய்வதும் ஒன்றல்ல!

பெண் சாதனையாளர், தொழிலதிபர், எழுத்தாளர், தொழில்நுட்ப வல்லுநர் எனப் பன்முகம் கொண்ட செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி கூறும் வெற்றி மந்திரம் இக்கட்டுரை....

பொருள் புதிது – தீபாவளி மலர் 2022

அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! பொருள் புதிது - தீபாவளி மலர் 2022இன் உள்ளடக்கம்.... (தலைப்பைச் சொடுக்குக!)

தரித்த நறுந்திலகம்!

நமது நாட்டை ஒருங்கிணைத்ததில் கலை, இலக்கியங்களுக்கு எத்துணை பங்குண்டோ, அதே அளவுக்கு பண்டிகைகளுக்கும் பங்குண்டு. குறிப்பாக தீபாவளி நமது பண்டிகைகளுள் முதன்மையானது. ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்த மக்களுக்கு பேரானந்தம் அளிக்க வரும் தீபாவளியை இருகரம் நீட்டி வரவேற்போம்! இந்த தீபாவளியை ஒட்டி, பொருள் புதிது தளத்தில் சிறப்புப் பகுதியாக ‘தீபாவளி மலர்’ வெளியாகிறது. இம்மலரின் இதழ்களை ஊன்றிப் படியுங்கள். உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரியப்படுத்துங்கள்.