அவரா சொன்னார்?

அமரர் பேராசிரியர் ஸ்ரீ. சோ.சத்தியசீலன், ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்; கம்பனில் ஆழ்ந்தவர்; தமிழகம் மட்டுமல்லாது, உலகமெங்கும் சென்று பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்த்தவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...

காவி கட்டிய கண்ணியம்

பேராசிரியர் ஸ்ரீ முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்; ராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், வைணவ பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே...

விவேகானந்தரும் அரவிந்தரும் அருளிய மறுமலர்ச்சி

திருமதி பிரேமா நந்தகுமார் (83), நாடறிந்த பேச்சாளர்; பாரதி ஆய்வாளர்; ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல நூல்களை எழுதி இருக்கிறார். ‘சுப்பிரமணிய பாரதி, இந்தியப் பண்பாட்டுக் கருவூலம் – உலக ஆன்மிகச் செல்வம், இந்தியத் தத்துவம், சரித்திரம் மற்றும் பண்பாடு’ போன்ற ஆய்வேடுகள் இவரது சிறப்பான பங்களிப்புகளாகும். நமது தலத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இரண்டாவது கட்டுரை இது….

நவ இந்தியாவின் தீர்க்கதரிசி

அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் (1930- 2016), தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்;  மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது இரண்டாவது கட்டுரை இங்கே….

சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்

பாரதியியல் ஆய்வாளர், அரவிந்த இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகங்களை உடையவர், பேராசிரியர் திருமதி பிரேமா நந்தகுமார் (83). ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். சுவாமி விவேகானந்தரை ஸ்ரீராமானுஜருடன் ஒப்பிடும் இவரது இனிய கட்டுரை இங்கே...

விவேகானந்தர் இன்றிருந்தால்…

திரு. இந்திரா பார்த்தசாரதி, பிரபல தமிழ் எழுத்தாளர்;  ‘குருதிப்புனல், ராமானுஜர், ஔரங்கசீப், ஏசுவின் தோழர்கள்’  உள்ளிட்ட 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்; சரஸ்வதி சம்மான் சாஹித்ய அகாதெமி, பத்மஸ்ரீ விருதுகளைப்  பெற்றவர். சொந்த ஊர் கும்பகோணம். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே….

துறவியர் மகிமை

அமரர் திரு. சாண்டில்யன் (1930- 1957), பிரபலமான தமிழ் எழுத்தாளர்; சரித்திரப் புதினங்கள் எழுதுவதில் புகழ் பெற்றவர். இயற்பெயர் பாஷ்யம் ஐயங்கார். பத்திரிகயாளர், விடுதலைப் போராட்ட வீரர், திரைப்பட வசனகர்த்தா எனப் பல பரிமாணங்களை உடையவர்; 50-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது சிறு கட்டுரை இங்கே...

ஆரியரும் தமிழரும்: சுவாமி விவேகானந்தரின் சில குறிப்புகள்

கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு மாபெரும் மாயை, ‘ஆரிய- திராவிட இனவாதம்’. இந்த மாபெரும் பொய் தொடங்கிய காலத்திலேயே இதன் அபாயத்தை உணர்ந்து எச்சரித்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர். இது தொடர்பாக பாரதி ஆய்வாளர் அமரர் திரு. பெ.சு.மணி அவர்களின் கட்டுரை இங்கே....

இசைவல்லுநர் விவேகானந்தர்

மறைந்த திரு. பெ.சு.மணி, தமிழின் மூத்த ஆய்வாளர்; பாரதியியல் எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…

இந்தியர்களுக்கு உயிர் இருக்கிறதா?

மறைந்த திரு. தென்கச்சி கோ.சுவாமிநாதன், புகழ்பெற்ற பேச்சாளரும்  எழுத்தாளரும் ஆவார். ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கியவர். அகில இந்திய வானொலியில்  உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இஅவரது கட்டுரை இங்கே…