அவதாரம் என்றால் மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். இக்கதையில், ஒருவன் கீழிருந்து மேலே செல்கிறான். மனித வாழ்வின் புரிபடாத சிக்கல்களையும் தவிப்புகளையும் பூடகமாகச் சொல்லிச் செல்லும் எழுத்தாளர், இங்கே இசக்கிமுத்துவின் மனமும் உருவமும் சிறிது சிறிதாக மாறி வருவதை அவதாரத்திற்கு முந்தைய கணங்களாக முன்வைக்கிறார். ஆன்மிக வேட்கை கொண்ட இக்கதையை புதுமைப்பித்தன் எழுதிய ஆண்டு 1947...
Category: கருவூலம்
ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்
மானிடப் பிறப்பில் உயர்வு- தாழ்வு இல்லை. அது அவனது குனத்தில் தான் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக நிறுவுகிறது சிறுகதை வேந்தர் ஜெயகாந்தன் அவர்களின் இக்கதை. எல்லோரும் அம்மாசியாகிவிட முடியாது தான். ஆனால், மனிதம் என்ற கனவை நோக்கிய பயணத்தில் பாசஞ்சர் வண்டிகள் வந்துகொண்டே இருக்கும்.
அகமும் புறமும் – 7
நாட்டை ஆளும் மன்னன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று வரையறுத்த நம் முன்னோர், மன்னனுக்கு உறுதுணை புரியும் அமைச்சனுக்கும் உயர் இலக்கணம் வரைந்துள்ளனர். ஒரு நல்லமைச்சன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இயல்புகளை தமிழின் பழமையான இலக்கியங்கள் வழியே இங்கு முன்வைக்கிறார் அமரர் பேரா. அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்.
நினைவாலே சிலை செய்து…
‘அந்தமான் காதலி’ படத்தின் பாடல்கள் அன்று முதல் இன்று வரை, செவிக்கு இதமாகவும் மனதைப் பக்குவப்படுத்தும் மருந்தாகவும் இருக்கின்றன. காதலியைப் பிரிந்து அவள் நினைவாகவே வாடும் நாயகன் அவளை தனது இதயத்திலிருந்து ஒருநாளும் அகற்றவில்லை. அதன் அடையாளமாகவே, “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்” என்று கூறும் நாயகன், தனது காதலியை “திருக்கோயிலே ஓடி வா?” என்று அழைக்கிறான். எவ்வளவு இனிய உவமை! கவியரசரின் சிந்தையில் மலர்ந்த திரைக்கவிதை இன்று மட்டுமல்ல, என்றும் மணம் வீசும்.
அகமும் புறமும் – 6இ
பழந்தமிழ் மன்னர்கள் புகழுக்காக போர் தொடுப்பதை ஒரு கடமையாகவே கொண்டிருந்தனர். அவர்களது புகழாசையால் தமிழ்நாட்டில் தமிழர்தம் குருதியே ஆறாய்ப் பாய்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டும், பேரா. அ.ச.ஞானசமபந்தன், போரால் அடையும் புகழை விட, வள்ளன்மையால் அடையும் புகழே மிகச் சிறப்பானது என்று இந்த அத்தியாயத்தில் நிறுவுகிறார். கரிகால்பெருவளத்தானை விட வள்ளல் பாரியே புகழ் மிக்கோங்கியவர் என்பது இவர்தம் தீர்ப்பு.
அகமும் புறமும் – 6ஆ
ஒருவனுடைய வாழ்க்கையில் கொள்ள வேண்டிய குறிக்கோள் எத்தகையதாய் இருத்தல் வேண்டும்? அது மிக உயர்ந்ததாய் இருத்தல் வேண்டுமாம். அவ்வாறாயின், அது கைகூடாததாகவும் இருக்கலாமோ எனில், இருந்தாலும் கவலை இல்லை என்கிறார் வள்ளுவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய ஒருவன் தன்னால் ஆளப்படும் நாட்டிற்குப் பெருநன்மை செய்ய வேண்டும் என்று விழைகிறான். நாட்டுக்கு நலன் விளைக்க வேண்டும் என்று நினைக்கும் அவனே ஆள்பவனாகவும் இருந்து விட்டால், அவனை யார் தடை செய்யமுடியும்? அவன் வேண்டுமானவரை நலம் புரியலாமே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு!
சினிமா மூலமாக மக்களிடையே செல்வாக்குப் பெற்று தமிழக அரசியல் களத்தையே மாற்றியவர் திரு. எம்.ஜி.ஆர். அதற்கு அவரது திரைப்படங்களில் அமைந்த பாடல்களும் பெருமளவில் உதவியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பாடல் இது. கவியரசரின் சிந்தனை வரிகள் ஒரு கதாநாயகனின் சொற்களாக அமைந்தபோது, அவர் மக்களின் தலைவன் ஆனது வியப்பில்லை தான்….
கடிதம்
நல்ல எழுத்துகளைப் பாராட்டுவது அதனை மேலும் வளர்க்கும். இல்லாவிடில், இக்கதையில் வரும் எழுத்தாளர் சிங்காரவேலு போல வெறுமையில் தான் வாட வேண்டி இருக்கும். இக்கதையில் வரும் எழுத்தாளர் யார், புதுமைப்பித்தனே தானா, அல்லது இதனை இங்கு பதிவேற்றும் நானா?
அகமும் புறமும் – 6அ
பழந்தமிழகத்தில் அரசன் எனப்பட்டவன் எவ்வாறு உருவானான்? அவன் ஏன் போர்களை நாடினான்? அவனே உலகின் அனைத்து இன்பங்களையும் சுவைக்கும் சுவைஞனாக எவ்வாறு ஆனான்? அரசனது தகுதிகள் என்ன? முடியாட்சி வழிவழியாக கைமாறியது எப்படி? அவனது அரண்மனை எவ்வாறு சிறப்புறக் கட்டப்பட்டது? அவனது தந்தக் கால் கட்டிலின் சிறப்புகள் என்ன? மன்னரைப் புலவர் பாடியதும் பாடாமல் ஒழிந்ததும் ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் புறநானூற்றுப் பாடல்களின் உதவியுடன் பதி அளிக்கிறார் பேரா. அ.ச.ஞா.
அகமும் புறமும் – 5
பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடாகும் இது. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். இரண்டு பிரிவாரும் மன அமைதியோடு வாழ்ந்தமையால் நாடு நல்ல நிலையில் இருந்தது. முதலாளி வர்க்கம் - தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப்பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் இருக்கவில்லை.
பாரதத்தின் பெருமை: பாருக்கே அணிகலன்!
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் எழுதிய இனிய கட்டுரை இது…
செந்தமிழ்த் தேன்மொழியாள்…
திரையுலகை ஆக்கிரமித்த திராவிட இயக்கத்தின் தொடக்கக் காலத்தில், அந்த இயக்கத்தின் இளம் நாற்றாக வெளிப்பட்ட கவியரசர் கண்ணதாசன் இயற்றிய அற்புதமான பாடல் இது. ‘மாலையிட்ட மங்கை’ (1958) என்ற இந்தத் திரைப்படமும், இந்தப் பாடலும் அக்காலத்தில் தமிழகமெங்கும் பிரபலமாகின. இத்திரைப்படத்தின் 15 பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டன. படத்தின் தயாரிப்பாளரும் அவரே. கவியரசரை தமிழகத்திற்கு முழுமையாக அறிமுகம் செய்வித்த திரைப்படம் இது எனில் மிகையில்லை.
புதுமைக்குப் பொலிவு கூட்டியவர் விவேகானந்தர்
பேராசிரியர் திரு. வ.தங்கவேல், திருவேடகம், விவேகானந்தா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; பெங்களூருவில் வசிக்கிறார்; சுவாமி விவேகானந்தர் குறித்த நாடகங்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
வீரத்துறவி விவேகானந்தரும் மகாகவி பாரதியாரும்
திருவாரூர் திரு. இரெ. சண்முகவடிவேல், தமிழ்ப் புலவர்; தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்க்கும் இலக்கிய சொற்பொழிவாளர்; ‘தமிழகம் அறிந்த சான்றோர்’, ‘திருக்குறள் கதையமுதம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இனிய கட்டுரை இங்கே…
பிரயாணம்
1969-இல் எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய திகிலூட்டும் அற்புதமான புனைகதை இது. அபத்தத்தின் எல்லையில், மானுட எல்லையைத் தாண்டிய ஒரு சக்தி இங்கே தரிசனமாகிறது....