பாஞ்சாலி சபதம் – 1.1.19

-மகாகவி பாரதி

விதுரன் தான் வந்த நோக்கத்தை நிறைவேற்ற, அஸ்தினாபுர மன்னர் திருதராஷ்டிரன் பாண்டவர்க்கு விடுத்த அழைப்பை உரைக்கிறார். கூடவே, இறுதியில் துரியனின் சூது சூழ்ச்சியையும் குறிப்பிடுகிறார்... 

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.19. விதுரன் அழைத்தல்

ஐவர் தமையுந் தனிக்கொண்டு போகி,
      ஆங்கொரு செம்பொன் னரங்கில் இருந்தே;-
‘மைவரைத் தோளன்,பெரும்புக ழாளன்
      மாமகள் பூமகட் கோர்மண வாளன்,
மெய்வரு கேள்வி மிகுந்த புலவன்
      வேந்தர் பிரான்,திரி தாட்டிரக் கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச்
      சீரொடு நித்தலும் வாழ்கென வாழ்த்தி,       122

‘உங்களுக் கென்னிடம் சொல்லி விடுத்தான்
      ஓர்செய்தி;மற்றஃ துரைத்திடக் கேளீர்!
மங்களம் வாய்ந்தநல் அத்தி புரத்தே
      வையக மீதில் இணையற்ற தாகத்
தங்கும் எழிற்பெரு மண்டபம் ஒன்று
      தம்பியர் சூழ்ந்து சமைத்தனர்,கண்டீர்!
அங்கதன் விந்தை அழகினைக் காண
      அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன்.       123

‘வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து
      மீண்டு பலதின மாயின வேனும்,
வாள்வைக்கும் நல்விழி மங்கையோ டேநீர்
      வந்ததெங்க ளூரில் மறுவிருந் தாட
நாள் வைக்கும் சோதிட ராலிது மட்டும்
      நாயகன் நும்மை அழைத்திட வில்லை;
கேள்விக் கொருமி திலாதிப னொத்தோன்
      கேடற்ற மாதம் இதுவெனக் கண்டே       124

‘வந்து விருந்து களித்திட நும்மை
      வாழ்த்தி அழைத்தனன்,என்னரு மக்காள்!
சந்துகண் டேஅச் சகுனிசொற் கேட்டுத்
      தன்மை இழந்த சுயோதன மூடன்
விந்தை பொருந்திய மண்டபத் தும்மை
      வெய்யபுன் சூது களித்திடச் செய்யும்
மந்திர மொன்றும் மனத்திடைக் கொண்டான்;
      வன்ம மிதுவும் நுமக்கறி வித்தேன்.’       125

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s