.
எழுதுகோல் தெய்வம்… இந்த எழுத்தும் தெய்வம்!
தமிழகத்தின் தவப்புதல்வர், அன்னைத் தமிழுக்கு புத்திளமை ஊட்டிய மகாகவி, தமிழ்ப் பத்திரிகை உலகின் பிதாமகர், நாட்டுநலனே மூச்சாய்க் கொண்ட தேசபக்தர், தமிழ் நவீன இலக்கியத்தின் அத்தனை பரிமாணங்களையும் தனது எழுத்து வல்லமையால் துலங்கச் செய்த முன்னோடி – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
அவரது கவிதைகள்- அதிலும் தேசபக்திக் கவிதைகள் – பெற்ற கவனத்தை அவரது அனைத்துப் படைப்புகளும் பெறவில்லை என்பது அனைவரும் அறியாத உண்மை.
யாப்பிலக்கணத்துடன் கூடிய சந்தக் கவிதைகளை எழுதியவர் மட்டுமல்ல, தமிழ் எழுத்துலகில் இன்று நாம் காணும் புதினம், புதுக்கவிதை, கருத்துப்படங்கள் ஆகியவற்றுக்கும் அவர்தான் பிள்ளையார்சுழி. தமிழ் இதழியலில் பல பரிசோதனை முயற்சிகளை நிகழ்த்தியவர் மகாகவி பாரதி.
அவரது அனைத்துப் படைப்புகளையும் ஒரே இடத்தில் தொகுப்பது ஓர் இமாலயப் பணி. இந்த ‘பாரதி இலக்கியம்’ பக்கம் அதற்கான ஓர் அணில் முயற்சி.

- ஆங்கிலக் கட்டுரைகள்